வலுப்பெற்ற NDA கூட்டணி.! தாக்குப்பிடிக்குமா திமுக.? ஒர்க் அவுட் ஆகுமா மோடி மேஜிக்.!

2 months ago 9
ARTICLE AD

நெருங்கும் தேர்தல்- பலமாகும் NDA கூட்டணி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உருவான திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணி அமைந்த பிறகு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்த தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் களம் இறங்கியுள்ளது பாஜக, இதற்கு ஏற்ப தமிழகத்தில் புதிய மற்றும் வலுவான கூட்டணியானது உருவாகி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக தனித்தனி அணியாக போட்டியிட்டது. இதன் காரணமாக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து திமுக கூட்டணி ஈசியாக 40க்கு 40 தொகுதிகளில் வெற்றியை தட்டிச்சென்றது. எனவே இந்த முறை இதனை விடக்கூடாது என எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க களம் இறங்கியுள்ளது அதிமுக- பாஜக, இதன் படி கடந்த ஆண்டே பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது அதிமுக, இதனையடுத்து அதிமுக- பாஜகவினர் பல இடங்களில் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் பாஜக தலைவர்கள்

அதிலும் அடுத்தடுத்து தமிழகத்தை குறிவைத்து பாஜக டாப் தலைவர்கள் படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக ஜனவரி மாதத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நிதின் நபின், பிரதமர் மோடி என வருகை தமிழக மக்களை திரும்பி பார்க்கவைத்துள்ளது. குறிப்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையில் கலந்து கொண்டது தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபினின் கோயம்புத்தூரில் பாஜகவினரின் உற்சாக வரவேற்பைப் பெற்ற பிறகு பேரூர் பட்டீஸ்வரர் மற்றும் மருதமலை கோயில்களுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பாக ஆலோசனையையும் வழங்கினார்.

NDA கூட்டணி புதிய கட்சிகள்

இதனையடுத்து NDA கூட்டணியை பலப்படுத்தும் வகையில் அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களையும் கொண்டு வருவதில் வெற்றி பெற்று வருகிறது பாஜக, இதற்காக அமித்ஷாவே களம் இறங்கி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு பலத்தை கூட்டி வருகிறார். இது போதாது என்று மோடியே தமிழகத்திற்கு வந்து முதல் கட்ட பிரச்சாரத்தை தொடங்கி வைத்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி  ஜனவரி 23 ஆம் தேதி மதுராந்தகத்தில் கலந்து கொண்ட கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக மேடையேறியது அக்கட்சி தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிப்ரவரி மாதத்திலும் பிரதமர் மோடி அடுத்தடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இழுபறி

இதனிடையே திமுக கூட்டணி இன்னும் உறுதியாகாமல் உள்ளது. தற்போது வரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. அதிலும் கடந்த முறையைவிட இந்த முறை அதிக தொகுதிகளை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்திருப்பதால் கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.  எனவே பாஜகவின் அதிரடி அரசியலை திமுக சமாளிக்குமா.? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read Entire Article