நாட்டில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் விரைவில் தொடங்கப்படவிருக்கும் நிலையில் மும்பை - பெங்களூர், வாரணாசி - புது தில்லி இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது.

இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.

குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் பயணிகள் வருகை பெருமளவில் அதிகரிப்பது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும், பயணத்தை மேலும் எளிதாக்கவும் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இந்த நிலையில், பெங்களூர் - மும்பை இடையேயான ரயில் சேவை அக். 31ஆம் தேதி தொடங்கப்படவிருக்கிறது. இது 1000 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 16 மணி நேரத்தில் கடந்து செல்லவிருக்கிறது. இது சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் சந்திப்பு முனையத்திலிருந்து சர் விஸ்வேஸ்வரய்யா முனையத்தை இணைக்கும். இந்த ரயில் கல்யாண், புனே, சோலாபூர், கலாபுராகி, ராய்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாகக் கடந்து செல்லும். இந்த ரயிலானது மகாராஷ்ரம் - கர்நாடக மாநிலங்களை ரயில் வழியாக இணைக்கிறது.

இது இரவு 8.10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டால் முற்பகல் 11.55க்கு பெங்களூர் சென்றடையும். பெங்களூரிலிருந்து இரவு 7.50க்கு புறப்பட்டால் மறுநாள் முற்பகல் 11.5க்கு வந்தடையும். வாரணாசி - புது தில்லி சேவை நவம்பர் 1ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன. இது பிரயாக்ராஜ், கான்பூர் இடையே கடந்து செல்லும். வாரணாசியிலிருந்து இரவு 8.50க்கு புறப்பட்டு இரவுவந்தே பாரத் படுக்கை வசதிகொண்ட முதல் ரயில் சேவை ஹௌரா - காமாக்யா இடையே இயக்கப்பட்டு வருகிறது. இவ்விரு ரயில் சேவைகளும், தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிப்போருக்கு மிகுந்த பயனுள்ள சேவையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகள், ஆன்மிகப் பயணம் மேற்கொள்வோருக்கும் இந்த ரயில் சேவை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.