வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?

2 weeks ago 2
ARTICLE AD

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கார் விற்பனை நிறுவனங்களில் ஒன்று டொயோட்டோ. இவர்களின் கார்கள் உலக சந்தையில் சக்கைப் போடு போட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் அசத்தி வருகிறது.

Toyota Glanza Facelift:

இந்தியாவில் இவர்களின் மிகவும் புகழ்பெற்ற காராக இருப்பது Toyota Glanza. பட்ஜெட் விலையிலான இந்த கார் நடுத்தர குடும்பத்தினரின் மனம் கவர்ந்த காராக திகழ்ந்து வருகிறது. இந்த காரின் புதிய அப்டேட் வெர்சனாக அறிமுகமாகியிருப்பது Toyota Glanza Facelift. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.99 லட்சம் ஆகும்.

இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் உட்கட்டமைப்பு வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலே அமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 5 வேரியண்ட்களை டொயோட்டோ அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை எவ்ளோ?

E Grade - ரூபாய் 6.99 லட்சம்

S Grade - ரூபாய் 7.71 லட்சம்

G Grade  - ரூபாய் 8.73 லட்சம்

V Grade  - ரூபாய் 9.99 லட்சம்

V(O) Grade - ரூபாய் 10.49 லட்சம்

சிறப்புகள்:

இந்த புதிய Toyota Glanza Facelift காரின் டாப் வேரியண்டில் லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் கியர் வேரியண்ட் பெட்ரோல் மட்டுமின்றி சிஎன்ஜி வேரியண்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த புதிய Toyota Glanza Facelift காரில் 1.2 லிட்டர் இசட் 12 இ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 1197 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3 சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட் 82 எச்பி ஆற்றலும், சிஎன்ஜி வேரியண்ட் 69 எச்பி குதிரை ஆற்றலும் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்டில் 5 கியர் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் மற்றும் மேனுவல் வேரியண்ட் கொண்டது.

வசதிகள்:

இந்த கார் ஃப்ரன்ட் வீல் டிரைவ் வேரியண்ட் ஆகும். ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி உள்ளது. பெட்ரோல் வேரியண்டில் பெட்ரோல் இஞ்ஜக்சென் வசதி உள்ளது. சிஎன்ஜி வேரியண்டில் டூயல் ப்யூல் பெட்ரோல் /சிஎன்ஜி வேரியண்ட் உள்ளது.

6 ஏர்பேக்குகள் பாதுகாப்பு அம்சத்திற்காக பொருத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வேரியண்ட் ஆகும். ப்ரேக் அசிஸ்ட் மற்றும் வெஹிகிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி உள்ளது. 3 பாயிண்ட் இஎல்இடி சீட்பெல்ட் மற்றும் எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் வசதி உள்ளது.

இந்த கார் 3 ஆயிரத்து 990 மி.மீட்டர் நீளமும், 1,745 மி.மீட்டர் அகலமும், 1500 மி.மீட்டர் உயரமும் கொண்டது. இந்த காரில் 318 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. டொயோட்டோ ஐ கனெக்ட் கார் டெக்னாலஜி வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. இன்போடெயின்மென்ட் ஸ்கிரின் வசதி உள்ளது.

Read Entire Article