வந்தது விடியல் ! இருளில் இருந்து நீங்கும் இருளர் மக்கள்; மாவட்ட நிர்வாகம் அதிரடி!

7 months ago 5
ARTICLE AD

விழுப்புரம்:  மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மயிலம் ஊராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் திண்டிவனம் நகராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை அரசு முதன்மைச் செயலர்/ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அரசு முதன்மைச் செயலர்/ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மயிலம் ஊராட்சியில் ஜன்மன் திட்டத்தின்கீழ், தலா ரூ.5.07/- இலட்சம் மதிப்பீட்டில் 46 இருளர் பழங்குடியினர் மக்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வெள்ளிமேடுபேட்டை - புதுச்சேரி நான்கு வழிச்சாலை

இதனைத் தொடர்ந்து, மயிலம் ஊராட்சியில், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் வெள்ளிமேடுபேட்டை புதுச்சேரி (வழி) மயிலம் சாலை (மா.நெ-136) கி.மீ 30/200 முதல் 35/200 வரை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, அரசு வழிகாட்டுதலின்படி சாலை அமைக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, மாற்றுச்சாலையில் வாகனங்கள் செல்லும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் சாலைப்பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி பேரூராட்சி கடைவீதியில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு,

தற்பொழுது வரை மருந்துகள் விற்பனை மேற்கொள்ளப்பட்ட விவரம் குறித்தும், மருந்து இருப்பு குறித்து கணினியில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் அதிகம் வாங்கும் மருந்துகள் மற்றும் கேட்கும் மருந்துகள் குறித்து விற்பனையாளரிடம் கேட்டறிந்ததுடன், பொதுமக்கள் கேட்கும் மருந்துகள் இல்லையென்றாலும், அந்நபரின் விவரத்தினை பெற்றுக்கொண்டு, மருந்துகளை வரவழைத்து அந்நபருக்கு வழங்கிட விற்பனையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ரூ.60.00 கோடி மதிப்பீட்டில் அரசு தலைமை மருத்துவமனை

முன்னதாக, திண்டிவனத்தில், ரூ.60.00 கோடி மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, தற்பொழுதுவரை நிறைவுபெற்றுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், மீதமுள்ள கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்

மேலும், திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என அரசு முதன்மைச் செயலர்/ஆணையர், போக்குவரத்து மற்றும் சாலைபாதுகாப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு தெரிவித்தார்.

Read Entire Article