தஞ்சாவூர்: தஞ்சாவூர் வர்த்தகத்தில் முன்னேற்றம் அடைந்து வருவதை நிரூபிக்கும் வகையில் லலிதா ஜுவல்லரியின் 62-வது புதிய கிளை திறப்பு விழா கோலாகலமாக நடந்துள்ளது.

தஞ்சாவூர் பல்வேறு விதத்திலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் தஞ்சாவூரில் டைடல் பார்க் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் தடம் பதிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் வர்த்தகத்தில் வெகு வேகமாக முன்னேற்றம் அடைய ஆரம்பித்துள்ளது. வர்த்தக நிறுவனங்களின் கிளைகள் தஞ்சாவூரில் தொடர்ந்து தொடங்க ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் தென்னிந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி, தனது 62-வது புதிய கிளையை தஞ்சாவூர் தெற்கலங்கத்தில் உள்ள திருவள்ளுவர் ( தியேட்டர்) வணிக வளாகத்தில் தொடங்கி உள்ளது. இந்த புதிய கிளை திறப்பு விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது .விழாவில் தஞ்சாவூர் மராட்டிய அரச குடும்ப தலைவர் ஸ்ரீமந்த் பாபாஜி ராஜா போன்ஸ்லே சத்ரபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‌தஞ்சாவூர் லலிதா ஜூவல்லரியின் புதிய கிளையை தொடங்கி வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

தொடர்ந்து பூண்டி கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி வாண்டையார், லலிதா ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் டாக்டர் கிரண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குத்து விளக்கு ஏற்றினர். விழாவில் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

லலிதா ஜுவல்லரி தஞ்சாவூா் கிளை திறப்பு விழா மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து லலிதா ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் டாக்டர் கிரண்குமார் கூறியதாவது :-

42 ஆண்டு கால பாரம்பரியமிக்க லலிதா ஜூவல்லரியின் புதிய கிளையை தஞ்சாவூரில் தொடங்கியுள்ளோம். மக்களின் உழைப்பின் மதிப்பை நான் அறிவேன். அதனால்தான் லாபத்தை விட வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். தஞ்சாவூர் மக்களின் ரசனைக்கு ஏற்ப பிரத்தியேக வடிவமைப்புகளை இங்கு கொண்டு வந்துள்ளோம்.

அனைத்து தங்க நகைகளுக்கும் சேதாரம் 1 சதவீதம் குறைவு. வைர நகைகளுக்கு ஒரு கேரட்டிற்கு ரூ.4000 தள்ளுபடி. 90 சதவீத வெள்ளி பொருட்களுக்கு சேதாரம் மற்றும் செய்கூலி கிடையாது. லலிதா ஜூவல்லரியின் தனிச்சிறப்பே அதன் வெளிப்படை தன்மை தான். வாடிக்கையாளர்கள் மற்ற கடைகளுடன் விலையை ஒப்பிட்டு பார்க்க விரிவான ‘எஸ்டிமேட் ஸ்லிப்’ பெறலாம் மற்றும் நகைகளை மொபைலில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

இங்குள்ள அனைத்து வைரங்களும் இ- எப் கலர் கிரேடு மற்றும் விவிஎஸ்1/விவிஎஸ் கிளாரிட்டி கொண்டவை. சர்வதேச தர சான்றிதழ்களுடன் இவை விற்பனை செய்யப்படுகின்றன. பழைய வைர நகைகளுக்கு 100 சதவீதம் எக்ஸ்சேஞ்ச் மதிப்பும் வழங்கப்படுகிறது. நகை முன்பதிவு திட்டத்தில் பழைய நகைகளை கொடுத்து, அதே எடைக்கு புதிய நகைகளை வாங்கி கொள்ளலாம். 11 மாதங்கள் முடிவில் 0 சதவீத சேதாரத்தில் முன்பணம் செலுத்தியும் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

பிளக்ஸி 100 என்பது ஒரு 11 மாத கால திட்டம். இத்திட்டத்தில் மாதா மாதம் நீங்கள் செலுத்தும் தவணை தொகையை, பணமாகவோ அல்லது தங்க எடையாகவோ (கிராம்களில்) வரவு வைத்து கொள்ளலாம். 11 மாத முடிவில் 100 சதவீதம் சேதார தள்ளுபடியுடன் பிடித்த நகையை வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகைகள் வரும் 20-ம் தேதி வரை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.