வடகிழக்கு பருவமழை தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள... செயலியை அறிமுகம் செய்த கலெக்டர்!

1 year ago 7
ARTICLE AD

இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அவசர கால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் : 1077 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண் : 1070 ஆகிய இலவச அழைப்பு எண்ணினை தொடர்பு கொள்ளலாம்” எனவும்  மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா வேண்டுகோள்.

மதுரையில் பல்வேறு இடங்களில் மழையால் பாதிப்பு - பணிகளில் சிரமம் ஏற்பட்டது.

மதுரை மாநகர் அண்ணா பேருந்து நிலையம், கோரிப்பாளையம், முனிச்சாலை, மதிச்சியம் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் மாலை 15 நிமிடம் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை மையம் மற்றும் விபத்து சிகிச்சை மையத்தில் மரங்கள் விழுந்து கடும் சேதம் ஏற்பட்டது. விபத்து சிகிச்சை கட்டிடத்தில் இருந்த மருத்துவமனை விளம்பர பலகை கீழே விழுந்த நிலையில் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கான வழிகள் மாற்றப்பட்டு வேறு வழிகளில் ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பாதை மூடப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

- மதுரை மாநகரில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் - எப்போது? எங்கே? - முழு விவரம் இதோ

பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது - பொதுமக்கள் கடும் அவதி

சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் உடைந்ததால் மின்சாரம் இன்றி பல்வேறு பகுதிகளிலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. போதிய மின் பணியாளர்கள் இல்லாத நிலையில் மின் இணைப்பு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரசு மருத்துவமனை காவல் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனை சிகிச்சை மற்றும் அரசு அலுவலக சேவைகள் பெறுவதில் கடும் சிரமமடைந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள TN- Alert செயலியை பொதுமக்கள் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் - தமிழ்நாடு அரசு TN- Alert என்னும் ஆப் குறித்து

மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN- Alert என்னும் கைப்பேசி செயலியை  பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ளலாம். இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அவசர கால தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் : 1077 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண் : 1070 ஆகிய இலவச அழைப்பு எண்ணினை தொடர்பு கொள்ளலாம்” எனவும்  மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Indian Israel Army: இஸ்ரேலால் அதிகரிக்கும் போர் பதற்றம் - இந்தியாவின் ராணுவ பலத்தை தாங்குமா? வெற்றி யாருக்கு?

Read Entire Article