வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

8 months ago 6
ARTICLE AD

தஞ்சாவூர்: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று மத்திய மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் இரா.விஜய்சரவணன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர்கள் எம்.எஸ்.வசந்த், சாய்ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டியன், தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தஞ்சை, திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள்  ஆபெல், ஆனந்த், சந்தோஷ், ஜெகதீசன், வீரமணி, கார்த்தி, ரஜினி , மாவட்ட நிர்வாகிகள் செந்தில், முருகேசன், பாரி, மெர்சி மற்றும் பகுதி கழக செயலாளர்கள், கிளை, ஊராட்சி நிர்வாகிகள் , அனைத்து பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டம்

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கடிதம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் - 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்த அறிவுறுத்தி இருந்தது அதன்படி திருச்சி மாநகர் மாவட்டம் மாவட்டச் செயலாளர் சந்திரா  தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக்கழக மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எதுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read Entire Article