"லால் சலாம்" எக்ஸ்டன்டட் வெர்ஷன் இப்போது  SunNXT-தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!

6 months ago 6
ARTICLE AD

SunNXT தளத்தில் லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் ஆகியோர் நடித்து கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லால் சலாம். ரஜினிகாந்த் இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. படத்தின் ரிலீஸூக்கு முன்பு முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டதால் படம் சுமாராக வந்திருப்பதாக படக்குழு சார்பாக கூறப்பட்டது. நீண்ட நாளாக ஓடிடி ரிலீஸ் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகியுள்ளது லால் சலாம்

நட்பு, துரோகம், இழப்பு  மற்றும் புரிதலுக்கான போராட்டங்களைத் தழுவிய ஒரு உணர்ச்சிப்பூர்வமான பயணம் தான் லால் சலாம்.  ஒரே கிரிக்கெட் அணியில் சிறுவயதில் விளையாடிய இரு நண்பர்கள், மதம், அரசியல் மற்றும் தவறான புரிதலால் பிரிந்துவிடுகின்றனர். அவர்களுக்குள் நிகழும் போராட்டம் தான் இந்தப்படத்தின் மையம். மதமும் அரசியலும் நட்பைப் பிரித்தாலும் ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டிராத புதிய பதிப்பு,  ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக இப்போது ஒளிபரப்பாகிறது.  இந்த புதிய பதிப்பில்,  நம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அட்டகாசமான ஸ்வாக், கிரிக்கெட் பின்னணி,  விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தின் அட்டகாசமான நடிப்பு ஆகியவற்றுடன், திரையில் கண்டிராத பல காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.

ரஜினிகாந்த் மற்றும் ரஹ்மான் எனும் மறக்க முடியாத கூட்டணி இப்படத்திலும் அசத்தியுள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு புது வடிவம் தந்துள்ளது. வெறும் திரைப்படமாக இல்லாமல், லால் சலாம் மனித உணர்வுகளுக்கு வலிமை கொடுக்கும் ஒரு அழகான பயணம்.

"லால் சலாம்" படத்தினை SunNXT தளத்தில் கண்டு மகிழுங்கள் !.

Read Entire Article