லாபமா? நஷ்டமா? வெளியானது VerSe இன்னோவேஷன் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை!

7 months ago 11
ARTICLE AD

டெய்லிஹண்ட் மற்றும் ஜோஷ் நிறுவனங்களின் தாய் நிறுவனமான VerSe இன்னோவேஷன் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வெளியாகியுள்ளது. VerSe இன்னோவேஷன் நிறுவனத்தின் லாப நஷ்டத்தை கணக்கிட்டு டெலாய்ட் கணக்கு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. VerSe இன்னோவேஷன் நிறுவனம் கட்டுக்கோப்புடன் இல்லை, பலவீனமாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாபத்தில் இயங்குகிறதா டெய்லிஹண்ட் நிறுவனம்?

இதுகுறித்து VerSe இன்னோவேஷன் இணை நிறுவனர் உமாங் பேடி கூறுகையில், "நிதிநிலை அறிக்கை உண்மையாகவும் நியாயமாகவும் உள்ளது. நிறுவனத்திற்குள் உள்ள கட்டுப்பாடுகள் டெலாய்ட்டால் பலவீனமானவை என்று அடையாளம் காணப்பட்டன. இருப்பினும், இந்த கட்டுப்பாட்டு பலவீனங்கள் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

நிறுவனத்தின் பலவீனம் காரணமாக அதன் இயக்கச் செலவுகள், குறுகிய கால கடன், செலவு கணக்கு தொடர்பான விவரங்கள் தவறாக கணக்கிடப்படலாம் என டெலாய்ட் எச்சரித்துள்ளது. இதுதொடர்பான விவரம் VerSe இன்னோவேஷன் நிறுவனத்தின் 2024 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மொத்த மதிப்பு என்ன?

"சப்ளையர் தேர்வு மற்றும் மதிப்பீடு, கொள்முதல் ஆர்டர் மற்றும் விலைப்பட்டியல் ஒப்புதல், கட்டண அங்கீகாரங்கள் உள்ளிட்ட பல முக்கிய நிதி செயல்முறைகளில் VerSe இன்னோவேஷன் நிறுவனத்திற்கு போதுமான கட்டுப்பாடு இல்லை" என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VerSe இன்னோவேஷன் நிறுவனம் தொடக்கத்திலிருந்து 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான நிதியை திரட்டி இருக்கிறது. கனடா ஓய்வூதியத் திட்ட முதலீட்டு வாரியம் (CPPIB), ஒன்டாரியோ ஆசிரியர்களின் ஓய்வூதியத் திட்டம், ஜேம்ஸ் முர்டோக்கின் லூபா சிஸ்டம்ஸ் மற்றும் Z47 (முன்னர் மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ்) உள்ளிட்டவை அதன் முக்கிய முதலீட்டாளர்களாக உள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு, 805 மில்லியன் அமெரிக்க டாலர்களை VerSe இன்னோவேஷன் நிறுவனத்தில் CPPIB முதலீடு செய்தது. நிறுவனத்தின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட $5 பில்லியனாக கணக்கிடப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கை வெளியானதை தொடர்ந்து VerSe இன்னோவேஷன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "செயல்முறைகளை வலுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். சிறந்த நடைமுறைகள் மற்றும் சரிபார்ப்புப் பட்டியல் குறித்த விரிவான பட்டறை தொடங்கப்பட்டுள்ளது.

இது அனைத்து தொடர்புடைய குழுக்களிலும் செயல்படுத்தப்படும். கூடுதலாக, நிறுவனம் சப்ளையர் தேர்வு, ஒப்புதல்கள், விலைப்பட்டியல் மற்றும் பணம் செலுத்துதல்களுக்கான நடைமுறைகளை முறைப்படுத்தும் ஒரு விரிவான "ஆர்டர்-டு-கேஷ்" கட்டமைப்பை நிறுவ திட்டமிட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

Read Entire Article