ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் கொடுத்து விட்டு தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்து பொட்டல முறை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் ப்ளுடூத் முறையில் ரேஷன் கடையில் பி.ஓ.எஸ் கருவியுடன் எடை தராசை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரேசன்கடைகளில் அவ்வப்போது சிக்னல் கோளாறுகளும் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு முறை ரேகை வைத்து பொருட்கள் கொடுப்பதிலேயே சிரமம் உள்ளது. இதனிடையே தற்போது செயல்படுத்தும் ப்ளூடூத் முறையினால் NPHH கார்டுகளுக்கு 5 முறையும் PHH கார்டுகளுக்கு 7 முறையும் கைரேகை பதிய வேண்டும் நிலை உள்ளதாகவும், ஏராளமான ரேசன் கடைகளில் எடையாளர் இல்லாத நிலையில் ஒரே பணியாளர் இரண்டு வேலை செய்ய வேண்டும் நிலை உள்ளதாகவும், இதனால் நேர விரையம் ஏற்படும் பணியாளர்கள் ஒரு முறை கைரேகை வைத்தாலே அனைத்து பொருட்களும் வழங்கப்படும் விதமாக தொழில் நுட்பத்தை செயல்படுத்த வேண்டும் என கோரியும்,

பொட்டல முறை அமல்படுத்த வேண்டும்

நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் மூட்டை எடை குறைவாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்த வேண்டும், ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் கொடுத்து விட்டு தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து விட்டு, பொட்டல முறை அமுல்படுத்த வேண்டும், ரேஷன் கடைகளில் போதிய இட வசதி ஏற்படுத்தி பணியாளர்களுக்கு கழிவறை வசதி செய்து தரப்படவேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர்.

மூட்டை எடை குறைவாக உள்ளது

ரேஷன் கடையில் ப்ளுடூத் முறையில் பி.ஓ.எஸ் கருவியுடன் எடை தராசை இணைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழக கடைகளிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் மூட்டை எடை குறைவாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்த வேண்டும், ரேசன்கடைகளில் அவ்வப்போது POS இயந்திரத்தில் சர்வர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - PTR on Annamalai: அண்ணாமலை கேட்ட கேள்வி.. புரளியை கிளப்ப வேண்டாம்.. பதிலடி கொடுத்த அமைச்சர் பி.டி.ஆர்