<p>தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 5 நாள்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு அட்டவணையானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்ளுக்கு செப்டம்பர் 20 முதல் 27 வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது.</p>
<p>11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரையில், அவர்களுக்கு செப்டம்பர் 19 தொடங்கி 27 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p>
<p> </p>