ரூபாய் ஒன்பது லட்சத்தில் பள்ளியை சீரமைத்த ஆசிரியை; குவியும் பாராட்டு - எங்கே தெரியுமா?

1 year ago 7
ARTICLE AD

சீர்காழி அருகே 76 ஆண்டுகள் பழமையான பள்ளி கட்டடம் சேதமடைந்ததால் மரத்தடியில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகளின் நிலை குறித்து அறிந்த பள்ளியின் முன்னாள் ஆசிரியை தமது சொந்த செலவில் பள்ளியை சீரமைத்து பயன்பாட்டிற்கு அளித்துள்ளார்.

மரத்தடியில் கல்வி பயின்ற மாணவர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பண்ணக்காரகோட்டகம் கிராமத்தில் வசந்தலா அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி 1948 -ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து தற்போதும் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 100 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பழமையான இப்பள்ளி ஓட்டு கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், அவை மிகவும் சேதம் அடைந்து கட்டடம் சிதிலமடைந்திருந்ததால் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்தும், அருகிலிருந்த அங்கன்வாடியிலும் கல்வி பயின்று வந்தனர்.

ஓடோடி வந்து உதவிய ஆசிரியை

இதனால் மழைக்காலங்களில் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தங்கள் கல்வியினை கற்று வந்தனர். இந்நிலையில் பள்ளியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஓய்வு பெற்ற கலைச்செல்வி தனசேகரன் என்ற ஆசிரியை, பள்ளியின் நிலை குறித்து அறிந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் பள்ளி கட்டடத்தினை சீரமைக்க விரும்பி தனது மகள் செளமியா, மருமகன் விமல் ஆகியோர் ஒத்துழைப்புடன் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டடத்தை சீரமைத்தார்.

Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?

ஒன்பது லட்சம் ரூபாய் சொந்த பணத்தில் பள்ளி சீரமைப்பு

புதிதாக பள்ளி கட்டடம் ஆஸ்பெஸ்டால் கூரையுடன் விசாலமாக அமைக்கப்பட்டு, மின்விசிறிகள், கரும்பலைகள் அமைக்கப்பட்டு அதனை மாணவர்களின் பயன்பாட்டிற்கு அளித்துள்ளார். பொதுவாக முன்னாள் மாணவர்களே தங்கள் பள்ளியின் நிலை அறிந்து அவற்றை சீர் செய்ய உதவும் சூழலில் பள்ளியின் முன்னாள் ஆசிரியையின் இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்தது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Gautam Gambhir Press Conference: பந்து வீச்சாளர்கள் தான் மாஸ் - ப்ளேயிங் லெவன் இப்படி தான் இருக்கும்! அசராமல் பதில் சொன்ன கம்பீர்

தமிழ் வழி கல்வியின் முக்கியத்துவம்

இந்த பள்ளி கட்டத்தை பயன்பாட்டிற்கு வழங்கி நிகழ்ச்சியில் பேசிய கலைசெல்வி தனசேகரன் தமிழ்வழியில் கல்வி கற்பதன் மூலம் வாழ்க்கையில் பல்வேறு சிறப்புகளை அடைய முடியும். தமிழ் வழி கல்வி கற்பவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகள், திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழ் வழி கல்வி கற்கும் வகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து, மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் சௌமியா விமல் பேசுகையில், மாணவர்கள் நன்னெறி கல்வி, வாழ்க்கை கல்வி ஆகிய இரண்டையும் கற்பதினால் வாழ்க்கையில் சிறப்படையலாம். நேரம் தவறாமை, நேர்மை இந்த இரண்டையும் மாணவர்கள் கடைபிடித்தால் வாழ்வில் உயரலாம் என்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சரிதா, நல்லமணி செய்திருந்தனர். நிறைவில்ஆசிரியர் முருகேசன் நன்றிக்கூறினார்.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மாலை தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் வஜ்ரம் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, விமல்ராஜ், ஆசிரியர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரவி வரவேற்றார்.

Read Entire Article