நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், தனது தயாரிப்பில் உருவாகும் மூன்று திரைப்படங்களின் உரிமைகள் மூலம் மிகப்பெரிய வியாபாரத்தை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்தின் ‘தர்மன்’, சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் ‘சண்டியர்’ ஆகிய படங்களை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.

ரூ.350 கோடிக்கு டிஜிட்டல், சாட்டிலைட் உரிமைகள்

சினிமா வர்த்தகத் தகவல்களின்படி, இந்த மூன்று படங்களின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஜியோஹாட்ஸ்டார் நிறுவனம் சுமார் ரூ.350 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, மூன்று படங்களின் ஆடியோ உரிமைகள் சார்ந்த வியாபாரத்தின் மதிப்பு சுமார் ரூ.63 கோடி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, டிஜிட்டல், சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமைகளைச் சேர்த்தால், மொத்த வியாபார மதிப்பு சுமார் ரூ.413 கோடியாக இருக்கலாம்.

ரஜினியின் ‘தர்மன்’ படத்துக்கு ரூ.150 கோடி

இந்த ஒப்பந்தத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’. கமல்ஹாசன் தயாரிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படம் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக உருவாகிறது. அனிருத் இசையமைக்கிறார். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளின் மதிப்பு ரூ.150 கோடி எனக் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்துக்கு ரூ.75 கோடி!

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படமும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் உரிமைகள் சுமார் ரூ.75 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்துக்குப் பிறகு உருவாகும் இப்படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத்துக்கு ரூ.125 கோடிய

கமல்ஹாசன் நடிப்பில், எஸ்.யு. அருண்குமார் இயக்கும் புதிய திரைப்படம் இந்தப் பட்டியலில் மூன்றாவது படமாகக் இடம்பெற்றுள்ளது. இப்படத்திற்கு சண்டியர் என டைட்டில் வைத்துள்ளனர். ஜியோ ஹாட்ஸ்டார் இப்படத்தின் ஓடிடி உரிமத்தை ரூ 125 கோடிக்கு பெற்றுள்ளது.

ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்துக்கு ரூ.150 கோடி, கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படத்துக்கு ரூ.125 கோடி, சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்துக்கு ரூ.75 கோடி என மூன்று படங்களின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளின் மதிப்பு ரூ.350 கோடிக்கும்  இதனுடன் ஆடியோ உரிமைகளின் ரூ.63 கோடியையும் சேர்த்து மொத்தம் ராஜ்கமல் நிறுவனம் ரூ413 கோடிக்கான வியாபாரத்தை தக்கவைத்துள்ளது.