ரூ.12 கோடி பரிசு! கேரள பூஜா பம்பர் லாட்டரி விற்பனை சூடுபிடிச்சிருக்கு! அதிர்ஷ்டம் யாருக்கு?

1 month ago 3
ARTICLE AD

நடந்து முடிந்த ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடியை பெயிண்டர் ஒருவர் தட்டி சென்றுள்ளார்.  இந்த நிலையில், அடுத்ததாக கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி (Pooja Bumper Lottery) விற்பனை தொடங்கி  நடந்து வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை 300 ரூபாய் ஆகும். முதல் பரிசு ரூ.12 கோடி ஆகும்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை கேரளாவில் மிகவும் பிரபலமாக உள்ளது.  கேரளாவில் லாட்டரி கடைகளை அதிக அளவில் காண முடியும். தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர்  மாநில எல்லையை தாண்டி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர்.  அந்த அளவுக்கு கேரளாவில் லாட்டரி கடைகளும் லாட்டரி விற்பனையும் நடைபெற்று வருகின்றன. கேரள அரசே அங்கு லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. தினசரி ரூ. 1 கோடிக்கான லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெறும். அதேபோல் வருடத்திற்கு 6 பம்பர் டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது.

ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றதுபோல் பம்பர் டிக்கெட் குலுக்கல் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் , புது வருட பிறப்பு, பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர், ஓணம் பம்பர், பூஜா பம்பர் என ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல்கள் நடைபெறுகிறது. இந்த பம்பர் டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசாக பல கோடி பரிசு அளிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஓணம் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கலில் பெயிண்டர் ஒருவருக்கு பம்பர் பரிசாக ரூ.25 கோடி கிடைத்தது. ஓணம் பம்பர் டிக்கெட் குலுக்கல் முடிந்த நிலையில் தற்போது அங்கு பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.12 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டம் அடித்து விடாதா விடாதா? என்ற எதிர்பார்ப்பில் பல்வேறு தரப்பினர்கள் ஆர்வத்துடன் இந்த டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. கேரளாவிற்கு செல்லும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் பலர் இந்த லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 22 ஆம் தேதி பிற்பகல் நடைபெறுகிறது. மொத்தம் 5 சீரிஸ்களில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டாவது பரிசாக ரூ.1 கோடி 5 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. மூன்றாவது பரிசாக ரூ.5 லட்சம் 10 டிக்கெட்டுகளுக்கு அளிக்கப்படுகிறது. லாட்டரி குலுக்கலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், விற்பனை விறுவிறுப்பாகி உள்ளது என கேரள லாட்டரி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். வழக்கம் போல எல்லா பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளைப் போல, இந்த டிக்கெட்டும் பாலக்காடில்தான் அதிகம் விற்பனையாகி வருவதாக கேரள லாட்டரி வியாபாரிகள் கூறுகின்றனர். அடுத்தடுத்த இடங்களில் திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகள் இருக்க கூடும் என்றும் லாட்டரி வியாபாரிகள் கூறினர்.

Read Entire Article