ராயல் என்ஃபீல்ட் நடத்திய ஜிம்கானா! சீறிப்பாய்ந்த ஆஃப் ரோட் ஹிமாலயன், கொரில்லா பைக்குகள்!

4 months ago 8
ARTICLE AD

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

ராயல் என்ஃபீல்ட் ஜிம்கானா:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்திஜ் சார்பில் ராயல் என்ஃபீல்ட் ஜிம்கானா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 28ம் தேதி நடந்த சென்னை ஆவடியில் உள்ள மோட்டோ பார்க் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதை ஏராளாமானோர் நேரில் கண்டு ரசித்தனர்.

அசத்திய ஆஃப் ரோட் வாகனங்கள்:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற Himalayan 450, Scram 440, Guerrilla 450 மற்றும் Hunter 350 ஆகிய பைக்குகளை வாகன ஓட்டிகள் ஓட்டி அசத்தினர். ஆஃப் ரோடிற்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த இரு சக்கர வாகனங்களை பார்வையாளர்கள் முன்பு வாகன ஓட்டிகள் ஓட்டி அசத்தினர்.

கரடு முரடான இடங்களிலும், பள்ளம் மேடுகளிலும் எந்தவித சிரமும் இல்லாமல் எப்படி லாவகமாக ஓட்ட முடிகிறது என்பதை ராயல் என்ஃபீல்ட் ஆர்வலர்கள் முன்பும், பார்வையாளர்கள் முன்பும் ஓட்டிக்காட்டினர். இதில் தொழில்முறை இரு சக்கர வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகன பந்தய வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் பொதுமக்கள் சிலரும் இந்த ஆஃப் ரோட் இரு சக்கர வாகனத்தை ஓட்டிப் பார்த்து மகிழ்ந்தனர்.

450 சிசி திறன் எஞ்ஜின்:

450 சிசி, 440 சிசி மற்றும் 350 சிசி திறன் எஞ்ஜின் கொண்ட இந்த இரு சக்கர வாகனங்களின் செயல்பாடுகளை இந்த நிகழ்வு மூலமாக பார்வையாளர்கள் அறிந்து கொண்டனர். ஆஃப் ரோட் மட்டுமின்றி நெடுஞ்சாலைகளிலும் இந்த வாகனங்கள் மிகவும் சிறப்பாக செயல்படும் ஆற்றல் கொண்டது.

இந்த நிகழ்விற்கு பிறகு விரைவில் லடாக்கில் செப்டம்பர் மாதம் ஒரு மிகப்பெரிய நிகழ்வை ராயல் என்ஃபீல்ட் நடத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article