Rameswaram Tambaram New Train Route: ராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் பாலத்தை தொடக்கி வைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த பாலத்தில் செல்லக்கூடிய முதல் பயணிகள் ரயிலும், ராமேஸ்வரம்-தாம்பரம் இடையில் செல்லக்கூடியதுமான, மேலும் ஒரு புதிய ரயிலை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை, ராம நவமி நாளில் தொடக்கி வைக்கிறார். இந்நிலையில், ராமேஸ்வரம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலானது எந்த வழித்தடத்தில் செல்கிறது, எந்த ரயில் நிலையத்தில், எந்த நேரத்தில் நின்று செல்லும் என்பது குறித்தான தகவலை பார்ப்போம்.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் என்பது தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தீவாகும். ஆம் ராமேசுவரமானது நிலப்பகுதியிலிருந்து பிரிந்து, கடல்பகுதியில் அமைந்துள்ள நிலப்பகுதியாகும். அதனால், இந்த தீவை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. வாகனங்கள் செல்லக்கூடிய பாலம் மற்றும் ரயில் பாலம் ஆகியவை பாம்பன் மற்றும் ராமேசுவரத்தை இணைக்கின்றன. இந்தியாவின் மிக முக்கியமான இந்து தீர்த்தயாத்திரை இடங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிலிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ராமேஸ்வரத்தில்தான் உள்ளது. இதனால், இந்தியாவிலுள்ள பக்தர்கள் இங்க வருவது வழக்கமாக இருக்கிறது.

புதிய பாம்பன் ரயில் பாலம்

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் இடையே கடலுக்கு மேல் அமைந்த ரயில் பாலமான, பாம்பன் பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது ,இந்தியாவின் முதல் கடலுக்கு மேல் அமைந்த ரயில் பாலமாகும். 100 ஆண்டுகள் நெருங்கிய நிலையில், பழைய பாம்பன் ரயில் பாலம் பயன்பாட்டிற்க்கு தகுதியற்றதாக மாறியது. இதனால் இந்திய அரசு புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்தது. இதையடுத்து, தற்போது புதிய பாலத்தின் பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த பாலமானது ரூ.550 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், புதிய செங்குத்து பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். அப்போது, ராமேஸ்வரத்திலிருந்து – தாம்பரம் செல்லக்கூடிய புதிய ரயில் சேவயையும் தொடக்கி வைக்கிறார்.

எந்த ஸ்டேசனில் நிற்கும்:

இந்த நிலையில், இந்த புதிய ரெயில் சேவைக்கான நேர அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16104), ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இதனை தொடர்ந்து தாம்பரத்தில் இருந்து அதே நாளில் மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16103), அதே வழித்தடம் வழியாக மறுநாள் காலை 5.40 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”தர்பூசணி சாப்பிடுங்க! அது ரசாயனம் இல்லை, எலி கடித்தது “- சர்ச்சைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி முற்றுப்புள்ளி