ராமதாஸின் 'பிளான்-பி' வியூகம்! ராமதாஸ் புதிய கட்சி தொடக்கம்? உருவாகும் அய்யா பாமக ?

2 months ago 8
ARTICLE AD

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் அதிகார மையத்தைக் கைப்பற்றுவதில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீண்டகாலமாக நிழல் யுத்தம் நடைபெற்று வந்தது. இந்த மோதலின் உச்சகட்டமாக, கட்சியின் பெயர் மற்றும் 'மாம்பழம்' சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி நடந்த சட்டப் போராட்டத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் ஆகியவை அன்புமணி ராமதாஸுக்கே சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதாக அன்புமணி தரப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு ராமதாஸ் தரப்பு தொடர்ந்து மறுப்பு தெரிவித்தும் வருகிறது. கட்சி மற்றும் சின்னம் தன்னிடம் இருப்பதாகவும் போலி ஆவணங்களை அன்புமணி தரப்பு கொடுத்திருப்பதாகவும் ராமதாஸ் தரப்பு தெரிவித்து வருகிறது.

அரசியல் வாரிசை எதிர்கொள்ள ‘பிளான்-பி’ வியூகம்

மறுபுறம் கட்சியும் சின்னமும் கையை விட்டுப் போனாலும், தனது அரசியல் செல்வாக்கு இன்னும் மங்கவில்லை என்பதை நிரூபிக்க ராமதாஸ் தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி தரப்பிற்கும், பதிலடி கொடுக்க 'பிளான்-பி' (Plan-B) எனும் திட்டத்தை ராமதாஸ் கையில் எடுத்துள்ளார். இதற்காக ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அமைப்பு முறைப்படி பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்ற வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொடி அடையாளம் மற்றும் தலைமைப் பொறுப்பு

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இக்கட்சியானது பாமகவின் அதே நிறம் மற்றும் அடையாளங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமமுக கொடியில் ஜெயலலிதாவின் முகம் இடம்பெற்றிருப்பதைப் போல, பாமக கொடியின் வண்ணங்களோடு டாக்டர் ராமதாஸின் முகத்தைப் பதித்து புதிய கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளைத் தனது நம்பிக்கைக்குரியவர்களிடம் ஒப்படைக்கும் நோக்கில், ராமதாஸின் வலதுகரமாகச் செயல்படும் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகனின் மகன் முகிலன், இக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனித்துப் போட்டியிட ராமதாஸ் முடிவு ?

இந்த புதிய கட்சியின் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தீவிர ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, வேட்பாளராக களம் இறங்க திட்டம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த தகவல்களை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு மறுத்து வருகிறது.

Read Entire Article