<p>காட்பாடி அருகே சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலின் என்ஜின் தனியே கழன்று சென்றது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p>
<p>அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில் வேலூர் காட்பாடி அருகே சென்றுகொண்டிருந்தது. முகுந்தராயுரம்- திருவலம் இடையே என்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு இடையே கப்லிங் கழன்றுள்ளது. இதனால் ரயிலின் என்ஜின் மட்டுமே தனியே கழன்றுவிட்டது. பயணிகள் ரயில் பெட்டிகள் மட்டும் தண்டவாளத்தில் தனியே நிற்கிறது. பயணிகளுடன் ரயில் பெட்டிகள் நடுவழியில் தண்டவாளித்தில் இருப்பதை பாதுகாப்பாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. </p>
<hr />
<p> </p>