ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்

3 days ago 3
ARTICLE AD

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளாவிய வசூலில் ரூ.700 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மற்றொரு இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக இது உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே ‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ எனப் பல படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது ‘ஜெயிலர் 2’ அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

‘ஜெயிலர் 2’ படத்தின் வசூல் சாதனையைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் இதற்கு முன்பு இண்டஸ்ட்ரி ஹிட் அந்தஸ்தைப் பெற்ற படங்கள் என்னென்ன, அவை உலகளவில் எவ்வளவு வசூலித்தன என்பதைப் பார்க்கலாம்.

படையப்பா (1999)

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் 1999ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது. இப்படத்தின் உலகளாவிய வசூல் சுமார் ரூ.60 கோடி என மதிப்பிடப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் இப்படம் நிகழ்த்திய வசூல் சாதனை ரஜினியின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியது.

சந்திரமுகி (2005)

பி. வாசு இயக்கத்தில் வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படம், ரஜினிகாந்த் மற்றும் ஜோதிகாவின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்டகாலம் திரையரங்குகளில் ஓடிய இப்படம், உலகளவில் சுமார் ரூ.75 முதல் ரூ.90 கோடி வரை வசூலித்ததாக மதிப்பிடப்படுகிறது. தமிழ் சினிமாவில் நீண்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடிய படங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.

சிவாஜி (2007)

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பிரம்மாண்டமான உருவாக்கம், ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. இப்படத்தின் உலகளாவிய வசூல் சுமார் ரூ.146 முதல் ரூ.152 கோடி வரை இருந்ததாகக் கணிக்கப்படுகிறது. ரூ.100 கோடி வசூலைக் கடந்த தமிழ் படங்களில் முக்கியமான இடத்தைப் பெற்றது.

எந்திரன் (2010)

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம், தமிழ் சினிமாவின் வசூல் எல்லையை விரிவுபடுத்தியது. ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அறிவியல் புனைகதை மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளுடன் உருவான இப்படம் உலகளவில் சுமார் ரூ.283 முதல் ரூ.320 கோடி வரை வசூலித்ததாக மதிப்பிடப்படுகிறது.

2.0 (2018)

‘எந்திரன்’ படத்தின் தொடர்ச்சியாக ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘2.0’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் அக்ஷய் குமாரும் நடித்திருந்தார். அதிக பொருட்செலவில் உருவான இப்படம் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. உலகளவில் சுமார் ரூ.656 கோடி வரை வசூலித்தது. ரஜினிகாந்தின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.

ஜெயிலர் 2 (2026)

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் ரூ.750 கோடியைக் கடந்துள்ளதாகப்  தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் வசூல் சாதனை, தற்போது தமிழ் திரையுலகின் அதிக வசூல் ஈட்டிய படமாக ஜெயிலர் 2 திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

Read Entire Article