“யார் அந்த தம்பி” தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் – பின்னணி என்ன?

7 months ago 5
ARTICLE AD

டாஸ்மாக் நிறுவனத்திலும் அதன் நிர்வாக இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டிலும் அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்னர் விடிய, விடிய சோதனை நடத்தியது. இந்நிலையில், விசாகனின் மணப்பாக்கம் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீடு அருகே வாட்ஸ் அப் உரையாடல்கள் சிலர் பிரிண்ட் எடுத்து கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்தன. இவற்றை அமலக்கத்துறை அதிகாரிகள் சேமித்தப்போது ஊடகங்களும் அதனை படம் பிடித்து வெளியிட்டன. அதில் ‘டியர் பிரதர்’ என்று தொடங்கி, டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் தொடர்பாக ஒருவருடன் விசாகன் பேசியதாக செய்திகள் வெளியிடப்பட்டன. அதே நேரத்தில், விசாகனை தங்களது அலுவலகத்தில் அழைத்துச் சென்று கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

”யார் அந்த தம்பி’? – சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்டான ஹாஷ்டாக்

இது ஒருபுறம் இருக்க,  வாட்ஸ் அப்பில் விசாகன் ஐ.ஏ.எஸ் உரையாடியதாக கூறப்படும் டியர் பிரதர் யார் என்பதை குறிக்கும் வகையில் ‘யார் அந்த தம்பி?’ என்ற ஹாஷ்டாக் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆனது. அந்த தம்பி என்பவர் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் பினாமி என்றும் அவரது நெருங்கிய நண்பர் என்றும் கூறப்பட்டது. இதே நேரத்தில், எம்.ஆர்.சி நகரில் உள்ள ரத்தீஷ் என்பவரது இல்லத்திலும் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அந்த வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால், வீட்டை பூட்டி சீல் வைத்தததுடன், ரத்திஷ் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பும் விடுத்துள்ளனர்.

வெளிநாடு தப்பிச் சென்றாரா? ரத்தீஷ்!

இந்நிலையில், ரத்தீஷ் துபாய்க்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் அவரை பிடித்து விசாரித்தால் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான எல்லா விவகரங்களும் வெளியே வந்துவிடும் என்றும் சமூக வலைதளங்களில் ‘யார் அந்த தம்பி’ என்ற ஹாஷ்டாக்குடன் அதிமுக ட்ரெண்ட்  செய்தது.

சுவற்றில் ஒட்டப்பட்ட போஸ்டர் –  பரபரப்பு

இதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன ‘யார் அந்த தம்பி’ என்ற ஹாஷ்டாக்கை பிரிணிட் எடுத்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வியுடன் சட்டப்பேரவைக்குள் அதிமுக சென்ற நிலையில், இப்போது யார் அந்த தம்பி? என்ற கேள்வியையும் அதிமுக எழுப்பியுள்ளது.

அந்த தம்பிக்கும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் விசாகன் ஐ.ஏ.எஸ்க்கும் என்ன தொடர்பு? தவறு ஏதும் இல்லையென்றால் ரத்தீஷ் ஏன் விசாரணைக்கு ஆஜராகாமல் மறைந்திருக்க வேண்டும் என்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த போஸ்டர்களை யார் ஒட்டியது என்று குறிப்பிடாமல் இருந்தாலும் அது அதிமுக தரப்பினராலேயே ஒட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு – ED

டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல் செய்வது, கூடுதல் விலை வைத்து விற்பது, டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த வழக்கில் விரைவில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் விசாரிக்கப்படவுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Read Entire Article