" யாரை கேட்டு நிலம் விற்பனை செய்தீர்கள் "

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட திருவுடையார்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கருப்பையா. இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

மேலும் இரண்டு மகன்களும் திருமணமாய் ஒருவர் சென்னையிலும் மற்றோரோருவர் ஆலங்குடியில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே தனியாக வசித்து வந்த தம்பதியினர் தங்களது தேவைக்காக அவர்களது பேரில் இருந்த 7 ஏக்கர் நிலத்தை விற்க முடிவு செய்திருக்கின்றனர்.

மது அருந்தி - தினந்தோறும் சண்டை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பையா மற்றும் லட்சுமி அந்த ஏழு ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அறிந்த கருப்பையாவின் இளைய மகன் முருகன் அவரது தாய் தந்தையிடம் "யாரை கேட்டு நிலத்தை விற்பனை செய்தீர்கள் " என கேட்டு தகராறில் ஈடுபட்டு அந்த நிலத்தை விற்ற பணத்தில் தனக்கு உரியை பங்கினை கொடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் தொடர்ந்து தினந்தோறும் மது அருந்து விட்டு சொத்து மற்றும் பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

தூக்கிட்டு தற்கொலை

தாய் தந்தை என கூட பார்க்கலாம் முருகன் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது. இதனால் கடும் மன அழுத்ததில் இருந்த தம்பதியினர் அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லத்ரா கோட்டை காவல்துறையினர் விரைந்து இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கருப்பையா லட்சுமி தம்பதியினர் அவர்களாகவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா ? இந்த உயிரிழப்பு எப்படி ஏற்பட்டது என்ற கோணத்தில் தற்பொழுது கருப்பையாவின் மகன் முருகேசன் உட்பட பலரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.