யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!

2 weeks ago 4
ARTICLE AD

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு வீழ்த்தினார். மேலும் தனது சைகை மூலம் மிகவும் பிரபலமானார். ஒரு மாதமாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வி.எஸ்.பாபு பங்கேற்றிருந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு

பின்னர் அவரது உடலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியானது. இதனையடுத்து மருத்துவனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தது. வி.எஸ்.பாபுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள்(வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டு இருப்பதாகவும், பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் வி.எஸ்.பாபு உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.

வதந்திகள்

கடந்த 23ம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடாத நிலையில்  வி.எஸ்.பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் இதனை அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்தனர்.

அரசியல் கட்சிகள் கோரிக்கை

இந்நிலையில் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை முன்னேற்றம் குறித்த விபரங்களை தொகுதி மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது  தமிழக அரசின் கடமை என அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

அதாவது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்: கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவிடம் நான் தொலைபேசியில் இரண்டு முறை பேசினேன். நலமடைந்து வருகிறார் அச்சப்பட தேவையில்லை. இரண்டு தினங்களுக்கு முன்பாக கூட உணவுத்துறை அமைச்சர் அவரை நேரில் சந்தித்ததாக தகவல் தெரிவித்தார்கள். மிகவும் உற்சாகமாக நன்றாக இருக்கிறார். எந்த வித கவலையும் கொள்ள தேவையில்லை என கூறினார்கள். வி.எஸ்.பாபு விரைந்து குணமடைந்து வருகிறார் என தெரிவித்தார்.

Read Entire Article