மோடி வருகையால் பள்ளிகளுக்கு விடுமுறையா? செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா அதிரடி அறிவிப்பு!

2 months ago 8
ARTICLE AD

"செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டி.சினேகா அறிவிப்பு"

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம்

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக தலைமையில் உருவாகியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நாளை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணிகள் மதுராந்தகத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 35 ஏக்கர் பரப்பளவில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வரும், பிரதமர் மோடி ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக 12 ஏக்கர் பரப்பளவில் எலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இந்தநிலையில் பிரதமர் மோடி வருகை குறித்து சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒரு சில தனியார் பள்ளிகள் பிரதமர் மோடி வருகையால் விடுமுறை விடுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் பகுதியில் இயங்கும் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன ?

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டி. சினேகாவிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்தார்.

Read Entire Article