மோடி எங்களுடன் இருக்கிறார், கல்விக்கடன் நிச்சயம் ரத்தாகும்! - அதிரடி காட்டிய சி.வி. சண்முகம்

3 months ago 13
ARTICLE AD

விழுப்புரம் : திமுக ஆட்சி டாஸ்மாக் ஆட்சியாக செயல்பட்டு வருவதாகவும் மகளிருக்கு கோடைகால சிறப்பு தொகையாக இரண்டாயிரம் ரூபாய் பெண்கள் வெய்யிலில் நின்று கருத்து சிறுத்து போனதாலும், அழகு எல்லாம் போய்விட்டதால் ஊட்டி கொடைக்கானல் சென்று குளு குளுவென இருக்க கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.

விழுப்புரம் அருகேயுள்ள வி.அரியலூரில் அதிமுக கோலியனூர் தெற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.

நலத்திட்ட உதவி வழங்கும் மேடையில் பேசிய சிவி சண்முகம்,திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், பல்வேறு வரிகள் உயர்வு குறித்து கேட்டால் அனைத்திற்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டோம் என தெரிவிப்பதாகவும் திமுக தேர்தல் வாக்குறுதி அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை 28 மாதங்கள் கழித்து எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாலும்,நாடாளுமன்ற தேர்தலினாலும் மட்டுமே வழங்கியதாகவும், அதுவும் அனைவருக்கும் என கூறிவிட்டு தகுதி வாய்ந்தவர்கள் என பிரித்து தருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் மகளிருக்கு உரிமை தொகையுடன் கோடை சிறப்பு தொகையாக இரண்டாயிரம் ஏன் வழங்கப்படுகிறது என்றால் பெண்கள் வெய்யிலில் நின்று கருத்து சிறுத்து போனதாலும், அழகு எல்லாம் போய்விட்டதால் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மாமனார் மாமியார், கணவருக்கு வேறொரு குடும்பம் இருந்தால் அனைவரையும் கொடைக்கானல் அழைத்து சென்று குளு குளு என இருக்க கொடுத்துள்ளதாகவும் அதனை வைத்து கொண்டு விழுப்புரத்திற்கே செல்ல முடியாது என சாடினார்.

மேலும் சட்டமன்ற தேர்தலில் தகுதி இருக்க இல்லையா என பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும், திமுக ஆட்சி டாஸ்மாக் ஆட்சி என விமர்சனம் செய்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் ஐந்தாயிரத்தில் முதல் நாளிலேயே ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மார்க் மூலம் வாங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாணவர்களுக்கான கல்விக்கடன் மத்திய அரசு வங்கிகளில் வாங்கி இருப்பதால் மாநில அரசு தள்ளுபடி செய்ய முடியாது எனவே தான் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சி அமைந்தால் அந்த கடனை மாநில அரசு ஏற்றுகொண்டு கடனை அடைக்கும் என தெரிவித்து இருப்பதாகவும் பிரதமர் மோடி தங்கள் கூட்டணியில் இருப்பதால் நாங்கள் சொல்வதை அவர் செய்வார்கள் என தெரிவித்தார்.

Read Entire Article