"மோசமான இந்து யார் என உங்களுக்குள் போட்டி" கலாய்த்த அகிலேஷ்.. சிரித்த அமித் ஷா

8 months ago 5
ARTICLE AD

உலகின் மிகப்பெரிய கட்சி என சொல்லி கொள்ளும் பாஜகவால் இன்னும் தேசிய தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை என நாடாளுமன்ற விவாதத்தின்போது அகிலேஷ் யாதவ் கலாய்த்தார். இதற்கு சிரித்து கொண்டே பதிலடி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரே குடும்பத்தில் இருக்கும் 5 பேரில் இருந்து தங்கள் தலைவரை தேர்வு செய்வதில்லை என்றும் 12 முதல் 13 கோடி கட்சி உறுப்பினர்களில் இருந்து ஒருவரை கட்சி தலைவராக தேர்வு செய்வதாகவும் தெரிவித்தார்.

மக்களவையில் காரசார விவாதம்:

நாடாளுமன்ற மக்களவையில் வக்பு திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தின்போது, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் இடையேயும் காரசார விவாதம் நடந்தது.

அப்போது, பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருவது குறித்து கலாய்த்த சமாஜ்வாதி கட்சி தலைவரும் கன்னோஜ் தொகுதி எம்பியுமான அகிலேஷ், "மோசமான இந்து யார் என்பதை நிரூபிக்க பாஜக தலைவர்களுக்கு மத்தியில் உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. நான் இதை ஆதாரம் இன்றி சொல்லவில்லை. உலகின் மிகப்பெரிய கட்சி என்று கூறும் கட்சியால் அதன் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை" என்றார்.

அமித் ஷா vs அகிலேஷ்:

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, இதற்கு எழுந்து நின்று பதிலடி அளித்தார். "அகிலேஷ், புன்னகையுடன் ஏதோ சொல்கிறார். நானும் புன்னகையுடன் பதிலளிக்கிறேன். அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் குடும்பத்தில் உள்ள ஐந்து பேரில் ஒருவரைத் தங்கள் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால், நாங்கள் ஒரு செயல்முறையைப் பின்பற்றி 12 முதல் 13 கோடி உறுப்பினர்களில் இருந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, அதற்கு நேரம் எடுக்கும். நீங்க நேரம் எடுக்க மாட்டீங்க. நான் சொல்றேன். நீங்க 25 வருஷம் கட்சித் தலைவராக இருப்பீங்க. எந்த மாற்றமும் இருக்காது" என்றார்.

தொடர்ந்து வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அகிலேஷ், "பணமதிப்பிழப்பு, வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அரசாங்கத்தின் பல தோல்விகளை மறைக்க வக்பு திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நாடு கலப்பு கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. வக்பு வாரியத்தில் இரண்டு பெண் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று நீங்கள் (பாஜக) சொல்கிறீர்கள். பீகார் தேர்தலில் எத்தனை பெண்களுக்கு பாஜக வாய்ப்பு கொடுக்கப்போகிறது என்பதை பார்க்கதான் போகிறேன்" என்றார்.

Read Entire Article