குழந்தைகள் பிறக்கும்போது பல்வேறு பிரச்சினைகளுடன் பிறப்பது தற்போது மருத்துவ வசதிகளுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், சில குழந்தைகள் சில சிக்கலுடன் பிறக்கின்றன. அதில், உதட்டுப் பிளவு என்பது மிகப்பெரிய இன்னல் ஆகும். உதட்டுப் பிளவு சிக்கலுக்கு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் தீர்வு கண்டு வருகின்றனர்.

மேல் உதட்டுப் பிளவு சிகிச்சை:

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிரெடிட் ஆக்சிஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தொண்டு செய்யும் நோக்கில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேல் உதட்டு பிளவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சைகள் இல்லாமல் வருவதை அறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறது.

இதன் ஒரு பகுதியாக ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பூந்தமல்லியில் உள்ள சவீதா பல் மருத்துவமனையின் உதவியுடன் மேல் உதட்டு பிளவுகளுடன் இருக்கக்கூடிய குழந்தைகளை கண்டறிந்து இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்து இலவச அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

25 லட்சம் ரூபாய் நிதி:

இதற்காக முதல் கட்டமாக அந்த நிறுவனம் ரூபாய் 25 லட்சம் நிதியை பல் மருத்துவ கல்லூரியில் வழங்கியுள்ளது. இது குறித்த கூட்டம் இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆக்சிஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மஞ்சுநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ரோட்டரி மாவட்டம் 3233இன் கவர்னர் தேவேந்திரன், ரோட்டரி நெய்தல் தலைவர் கோகுல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலவச சிகிச்சை:

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ரூபாய் 75 லட்சம் நிதி கொடுக்க உள்ளதாகவும் தமிழகத்தில் எந்த பகுதியில் மேல் உதட்டு பிளவுக்காக சிகிச்சை பெற காத்திருக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பட்டியலை சேகரித்து அவர்களுக்கு இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.sav