மேற்கு வங்கத்தில் இருந்து தஞ்சைக்கு வருகை... விவசாயிகள் மகிழ்ச்சி: என்ன தெரியுங்களா?

3 months ago 8
ARTICLE AD
<p style="text-align: justify;">தஞ்சாவூர்: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 5,460 பேல் சாக்குகள் தஞ்சை ரயில் நிலையம் வந்தது. தொடர்ந்து அதனை லாரிகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.</p> <p style="text-align: justify;">தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சாகுபடிக்காக கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாட்டால் கொள்முதல் பணிகளில் தோய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து 27,30,000 சாக்குகள் நேற்று சரக்கு ரயிலில் தஞ்சைக்கு வந்தது.</p> <p style="text-align: justify;">அதனை 150 லாரிகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி என 10 தாலுகா உள்ளது. எனவே நேற்று சரக்கு ரயிலில் வந்த சாக்குகள் பிரித்து அனைத்து தாலுகாவிற்கும் அனுப்பப்பட்டது.&nbsp;</p> <p style="text-align: justify;">மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நேரங்களில் &nbsp;சாக்கு தட்டுப்பாடுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சாக்குகள் வரவழைக்கப்பட்டது. அதன்படி 5460 பேல் சாக்குகள் நேற்று சரக்கு ரயில் தஞ்சை வந்தது. ஒரு பேல் என்பது 500 சாக்குகள் ஆகும். அதன்படி 27,30,000 சாக்குகள் நேற்று தஞ்சை வந்தது. அதனை லாரிகள் மூலம் சாக்குகள் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.</p>
Read Entire Article