மேட்டூர் அணை : சுரங்கம், கதவணை நிலையங்களில் 247 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அடிவாரம், 4 அலகுகளில் தலா, 12.5 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, 50 மெகாவாட் அணை மின் நிலையம்; ஒரு அலகில் தலா, 50 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 200 மெகாவாட் சுரங்க மின் உற்பத்தி நிலையம் உள்ளன. தவிர அணை அடிவாரம் முதல் கரூர் வரை, 10 கி.மீ.,க்கு, 1 வீதம், 7 இடங்களில் காவிரி குறுக்கே தலா, 30 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கதவணை மின் நிலையங்கள் உள்ளன. இதில் அணை, சுரங்க மின் நிலையங்களில் முழுமையாக, 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, 23,500 முதல், 25,000 கனஅடி நீர், கதவணை மின் நிலையங்களில், முழு மின் உற்பத்திக்கு, 20,000 கனஅடி நீர், காவிரியில் வெளியேற்ற வேண்டும்.

வினாடிக்கு, 6,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு, நேற்று காலை, 10:00 மணி முதல், 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், அணை, சுரங்க மின் நிலையங்களில், 100 மெகாவாட், 7 கதவணை மின் நிலையங்களில் தலா, 20 முதல், 21 மெகாவாட் என, 240 முதல், 247 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.70 அடியாக குறைந்தது

காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6,501 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து திங்கள்கிழமை காலை வினாடிக்கு 6,019 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரில் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.92 அடியிலிருந்து 114.70 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 85. 26 டி.எம்.சியாக உள்ளது.