மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போரை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்யக் கோரி புதிய பேருந்து நிலையம் முன்பு 3 நாட்களுக்குப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு காந்திகிராமம், சீலமுத்தையாபுரம், வண்டியூர், வீருசின்னம்மாள்புரம், சிங்கராஜபுரம், பசுமலைத்தேரி , கீழபூசனூத்து, மேலபூசனூத்து, அரசரடி, இந்திரா நகர், பொம்மிராஜபுரம் உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பட்டா இல்லாத குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேகமலை வனப் பகுதியை ஆக்கிரமித்துள்ள 4,601 பேரை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினா். இதனால், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இரண்டடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் மூடப்பட்டு, அருகில் உள்ள சிறிய கதவு மட்டும் திறந்து வைக்கப்பட்டது.

இதில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வருபவா்களை விசாரித்த பிறகே போலீஸாா் உள்ளே அனுப்பி வைக்கின்றனா். இதேபோல, பின்புறப் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் நுழைவு வாயிலும் மூடப்பட்டு, ஆட்சியா் அலுவலத்துக்கு வருபவா்களை விசாரணைக்கு பிறகே அனுப்பி வைக்கின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலையைச் சேர்ந்த பொதுமக்களின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியரகத்துக்குள் அடுத்த மூன்று நாட்களுக்குப் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, நுழைவு வாயில் மூடப்பட்டது.

போராட்டம் நடைபெறும் இடத்தின் தன்மை, கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன்கவுதம் நேற்று ஆய்வு செய்தார். அசம்பாவிதங்களைத் தவிர்க்க போராட்டம் நடைபெறும் நாட்களில் கடமலைகுண்டு, வருசநாடு மயிலாடும்பாறை தங்கம்மாள்புரம் மூலக்கடை குமணன்தொழு ஆகிய கிராமங்களில் உள்ள 6 டாஸ்மாக் கடைகளையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வனகிராம மக்கள் கூறுகையில், “இன்று முதல் பெருந்திரள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேகமலை வழக்கு வரும் 29-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அந்த விசாரணையின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் காத்திருப்பு போராட்டத்தை வலுப்படுத்தி நடத்துவோம்” என்றனர்.