<h2>நடிகர் ஸ்ரீ</h2>
<p>சினிமாவில் தான் நடித்த படங்களுக்கு சரியாக சம்பளம் வராத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளானார் நடிகர் ஸ்ரீ. சில மாதங்கள் முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தலைமுடியை கலர் செய்து உடல் மெலிந்து யாருக்கும் தெரியாமல் தனித்து வாழ்ந்து வந்தார். அவரது நண்பர்களின் உதவியோடு அவரை மீட்டனர் குடும்பத்தினர். தற்போது சிகிச்சைக்கு பின் ஸ்ரீ மறுபடியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p>
<p>ஸ்ரீ உடல்நிலை தேறி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். அதே நேரம் அவர் ' மே ஐ கம் இன் ' என்கிற புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.</p>
<p> </p>