முன்னாள் அமைச்சர்கள் உருவப்படம் அவமதிப்பு – தி.மு.க பேச்சாளர் கைது

3 weeks ago 4
ARTICLE AD

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் உருவப்படங்களை அவமதித்த சம்பவம் தொடர்பாக தி.மு.க பேச்சாளரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் குற்றச்சம்பவங்களை கண்டித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அம்மன் அர்ஜுனன் எம்.எல்.ஏ ஆகியோர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உருவப்படம் அவமதிப்பு

இந்த நிலையில், பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து, அவற்றை கம்பங்களில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. “பொள்ளாச்சி அனைத்து மகளிர்” என்ற பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்து, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் தி.மு.க பேச்சாளர் குட்டப்பன் மீது தேர்தல் விதிமுறை மீறல், தனிநபரை அவமதித்தல் மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article