முன்னாடி பின்னாடி என்ன இருந்தது.. லோகேஷ் கனகராஜ் படத்தை மிஞ்சிய கடத்தல்.. அதிகாரிகள் ஷாக்

6 months ago 5
ARTICLE AD

மிசோரமில் சந்தேகத்துக்கு இடமான காரை சோதனையிட்டபோது, பின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த, போதைப்பொருள்கள் அடங்கிய 10 பாக்கெட்டுகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

லோகேஷ் கனகராஜ் படத்தை மிஞ்சிய கடத்தல்:

எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.

இந்த நிலையில், போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த 30ஆம் தேதி, (30.05.2025) மிசோரமின் செலிங் பகுதியில் ஐஸ்வால் - சாம்பாய் நெடுஞ்சாலையில் (என்ஹெச்-6) வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் (டிஆர்ஐ), ஒரு காரில் இருந்து 9.72 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு  ₹ 9.72 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

"முன்னாடி பின்னாடி என்ன இருந்தது"

வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சந்தேகத்துக்கு இடமான அந்தக் காரை சோதனையிட்டபோது, பின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த, போதைப்பொருள்கள் அடங்கிய 10 பாக்கெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.

மீட்கப்பட்ட கடத்தல் போதைப்பொருளும் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக ஒருவர் போதைப்பொருள்கள் தடுப்புச் சட்டம்-1985-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், மியான்மரில் இருந்து இந்த போதைப் பொருள் மிசோரமிற்கு கடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் ஷாக்:

கடந்த ஜனவரி மாதம் முதல், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் மிசோரமில் ₹ 72 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மெத்தம்பேட்டமைன், ஹெராயின் ஆகிய போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்து ஏழு பேரைக் கைது செய்துள்ளது.

இதற்கு முன்பு, மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.

சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தில் குஜராத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) இணைந்து நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்பட்டது.

Read Entire Article