முதல் முறை.. பாகிஸ்தானுக்குள் சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணை.. வெளியானது டாப் சீக்ரெட்

7 months ago 9
ARTICLE AD

பாகிஸ்தான் மீதான தாக்குதலின்போது பிரம்மோஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதி செய்துள்ளார். ராணுவ வலிமை தெரிந்துவிடும் என்பதால் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை எந்த நாடும் வெளியே தெரிவிக்காது. அதை மீறி, டாப் சீக்ரெட்டை வெளியே சொல்லி இருக்கிறார் யோகி ஆதித்யநாத்.

வெளியானது டாப் சீக்ரெட்:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை கதிகலங்க வைத்தது இந்தியா. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா. இந்த தாக்குதலில், இஸ்ரேல், ரஷியா மற்றும் உள்நாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ராணுவ வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. பொதுவாக, ராணுவ வலிமை தெரிந்துவிடும் என்பதால் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படாது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூரில் எந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்ற டாப் சீக்ரெட்டை வெளியே சொல்லி இருக்கிறார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். லக்னோவில் பிரம்மோஸ் சோதனை மற்றும் உற்பத்தி பிரிவை திறந்து வைத்து பேசி அவர், "நீங்கள் ஆபரேஷன் சிந்தூரின் போது பிரம்மோஸ் ஏவுகணையை லேசாக பார்த்திருப்பீர்கள். நீங்கள் பார்த்திருக்கவில்லை என்றால், பிரம்மோஸ் ஏவுகணையின் சக்தியைப் பற்றி பாகிஸ்தான் மக்களிடம் கேட்டு பாருங்கள்.

உறுதியாக சொன்ன யோகி:

எதிர்காலத்தில் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் போர்ச் செயலாகக் கருதப்படும் என மோடி அறிவித்திருந்தார். இந்த நேரத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒருங்கிணைந்து பதில் தருவது அவசியம். பயங்கரவாதத்தை முற்றிலுமாக நசுக்காத வரை, அதன் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. பயங்கரவாதத்தை நசுக்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாம் அனைவரும் ஒரே குரலில் போராட வேண்டும்.

பயங்கரவாதத்தால் அன்பின் மொழியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு அதன் சொந்த மொழியிலேயே பதிலளிக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா முழு உலகிற்கும் ஒரு செய்தியை வழங்கியுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "லக்னோவில் உள்ள பிரம்மோஸ் உற்பத்தி ஆலை இந்தியாவின் உற்பத்தித் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நட்பு நாடுகளுக்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதோடு, நாட்டின் பொருளாதார வலிமையையும் மேம்படுத்த உதவும். பிரம்மோஸ் ஆலையுடன் 7 துணை அலகுகளும் வரவுள்ளன. லக்னோவில் அமைந்துள்ள தனியார் துறை பாதுகாப்பு நிறுவனமான பிடிசி இண்டஸ்ட்ரீஸ் வேகமாக விரிவடைந்து வருகிறது" என்றார்.

வேறு என்ன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது?

ரஃபிகி (ஷோர்கோட்), முரித் (சக்வால்), நூர் கான் (சக்லாலா), ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியன் (கசூர்) ஆகிய இடங்களில் உள்ள விமானத் தளங்கள் மற்றும் பாஸ்ரூர் மற்றும் சியால்கோட்டில் முக்கியமான ரேடார் அமைப்புகளை தாக்கி அழிக்க பிரம்மோஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் வரலாற்றில் முதல்முறையாக போர் நடவடிக்கையின்போது பிரம்மோஸ் ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதை தவிர, S 400 triumf system (ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஏவுகணைகள்), Barak 8 (இந்தியா - இஸ்ரேல் இணைந்து உருவாக்கிய ஏவுகணை), Akash (DRDO தயாரித்த உள்நாட்டு ஏவுகணை) ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Read Entire Article