2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை கிளப்பியுள்ளது. வழக்கமாக இல்லாமல் இந்த சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாக விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் களம் கண்டுள்ளது. சினிமா பிரபலமான விஜய்க்கு தமிழ்நாட்டில் உள்ள மக்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தாலும் அவரின் அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு

எப்போதும் இல்லாத அளவுக்கு ஆளும் திமுக கூட்டணியில் 19க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளது. இதில் காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி ஆகியவைகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டது. தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதேசமயம் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாகா, அமமுக, தமமுக, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்டவை இருக்கும் நிலையில் இன்னும் தொகுதி பங்கீடு குறித்து எந்தவித தகவலும் வரவில்லை. தமிழக வெற்றிக் கழகம் கடைசி நேரத்தில் கூட்டணிக்கு யாராவது வருவார்களா என்ற எதிர்பார்ப்போடு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் அக்கட்சி அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையப்போவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

இந்த நிலையில் ஊடகங்கள் மற்றும் யூட்யூப் சேனல்கள் என பலவும் மக்களிடம் கருத்து கேட்கும் பணியில் களமிறங்கி வருகின்றன.

லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்து கணிப்பு

இந்த நிலையில் தமிழக தேர்தல்களில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு நடத்தும் கருத்துக் கணிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த முறை நடத்திய கருத்துக் கணிப்பில் எதிர்பாராத பதில்கள் கிடைத்துள்ளது. மூன்று முறை இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நகர்புற மக்கள் ஆதரவானது திமுகவுக்கு 24.77%, தவெகவுக்கு 23.46 %, அதிமுகவுக்கு 20.55%, நாதகவுக்கு 6.7% இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் மொத்தமாக பார்க்கும்போது தவெகவுக்கு 19.20%, திமுகவுக்கு 17.7%, அதிமுகவுக்கு 15.32%, நாதகவுக்கு 6% வாக்குகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக யார் வருவார் என்ற கேள்விக்கு 18-30 வயதுக்குட்பட்டவர்களின் தேர்வாக விஜய் இடம் பெற்றுள்ளார். ஆனால் கட்சி மற்றும் நிர்வாக ரீதியாக பார்க்கும்போது மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்ற பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். 1.40 கோடி வாக்குகள் அந்த கட்சிக்கு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை திமுக மற்றும் அதிமுக வாக்குகளில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்ததாக கூறப்பட்டுள்ளது.