‘மு.க. ஸ்டாலினின் மூளை' வியூகம் வகுத்த சபரீசன்

3 weeks ago 6
ARTICLE AD

சென்னை: தமிழக அரசியலில் திமுகவின் தொடர் வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய சூத்திரதாரியாகவும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும் அறியப்படுபவர் அவரது மருமகன் சபரீசன். கடந்த 15 ஆண்டுகாலமாக திமுகவை நவீன அரசியலுக்குத் தயார்படுத்தியதில் இவருக்குப் பெரும் பங்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

திமுகவை நவீனப்படுத்தியதில் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பெரும் பங்கு உண்டு. ஏறத்தாழ 15 ஆண்டு காலம் ஸ்டாலினின் கண்களாகவும் மூளையாகவும் செயல்பட்டவர் அவர். இந்திய அரசியல் வியூக வகுப்பாளர்களின் தேவையை உணர துவங்கிய காலத்தில் அதற்கான அடிப்படை கட்டமைப்பை கட்சிக்குள் ஏற்படுத்தியது சபரீசன்தான்.

தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையிலும் ஸ்டாலினை ஒரு பிராண்டாக மாற்றியதிலும் அவரை தேசிய அளவில் ஒரு வலிமையான தலைவராக நிலை பெற வைத்ததிலும் சபரீசனின் பங்கு அதிகம். பத்தாண்டு காலம் அதிகாரத்தில் இல்லாத திமுகவிற்கு 2021 தேர்தலில் அதிமுக பாஜக போன்ற பணபலம் மிக்க கட்சிகளை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி இருந்தது. அதற்கான நிதி கட்டமைப்பை திமுகவுக்கு உருவாக்கியதில் சபரீசனின் பங்கு எத்தகையது என்பதை உள்ளரங்க அரசியல் அறிந்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

தொழிலதிபர்கள், அறிவுஜீவிகள், வியூக வகுப்பு நிறுவனங்கள், தேசிய அளவில் அறிமுகம் பெற்ற தலைவர்கள் என நவீன கால அரசியலை நடத்த தேவையான சக்திகளை திமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து ஒருங்கிணைத்தாலும் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டதில்லை. கட்சிக்குள் அவர் பெயரில் கோஷ்டி எதுவும் உருவாகவில்லை. அவரது நண்பர்களோ உறவினர்களோ அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டதாக செய்திகள் ஒருபோதும் வந்ததில்லை.

மு கருணாநிதிக்கு எப்படி முரசொலி மாறன் மனசாட்சியாக இருந்தாரோ அப்படியே ஸ்டாலினுக்கு மூளையாக செயல்பட்டவர் சபரீசன். 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை வென்றது வரையான வெற்றிப் பயணத்தின் சூத்திரதாரியாக அவர் அறியப்பட்டார். இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள ஆளில்லாமல்தான் அதிமுக தேசிய அரசியலில் தனது முக்கியத்துவத்தை இழந்தது.

தமிழ்நாட்டு அரசியல் களம் பெருமளவு இணையப் பரப்பை சார்ந்து செயல்படும் நிலைக்கு நகர்ந்திருக்கும் சூழலையும் தேசிய அரசியலில் திமுகவின் முக்கியத்துவத்தை தக்க வைக்கும் சவாலையும் ஒரே நேரத்தில் எதிர் கொண்டிருக்கிறார் ஸ்டாலினின் மருமகன். அரசியல் களம் தொழில்நுட்பம் சார்ந்த பரப்புக்கு மாறிவிட்டதை எதிர்கொள்வதுகூட அவருக்கு சுலபமாக இருக்கலாம்.

ஆனால் பழைய பாணி அரசியலில் தேர்ச்சி பெற்ற கட்சியினரின் ஏமாற்றத்தையும் சோர்வையும் களைந்து அவர்களை புதிய பிரச்சார வடிவத்திற்கு தயாரிப்பது அத்தனை இலகுவாக இருக்காது. அதனை சபரீசன் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பார்க்க அரசியல் நோக்கர்கள் காத்திருக்கிறார்கள்.

Read Entire Article