மீண்டும் விஜய்தான் முதல்வர்… 5 ஆண்டுகள் ஆட்சி நடத்துவார்!” – மானாமதுரையில் வைகோ அதிரடி பேட்டி.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காகச் சென்ற வைகோவுக்கு, மானாமதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினரைச் சந்திக்க முதல்வர் விஜய் அனுமதி அளிக்காதது அவரது ஆட்சியின் சட்டம் ஒழுங்கு மற்றும் நேர்மைக்கு எடுத்துக்காட்டு என்றார்.

ஏன் குரல் எழுப்பவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

தேக்கம்பட்டி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகளை வழக்குப்பதிவு செய்த 14 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் மீண்டும் பிடித்ததற்குப் பாராட்டுத் தெரிவித்த வைகோ, இந்தச் சம்பவம் தொடர்பாக விமர்சனம் செய்தவர்களைக் கேள்வி எழுப்பினார். கடந்த ஆட்சிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றபோது அவர்கள் ஏன் குரல் எழுப்பவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

விஜய் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்துவார் - மீண்டும் அவரே ஆட்சிக்கு வருவார்

மேலும், முதல்வர் விஜயின் ஆட்சி ஆறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும் எனக் கூறப்படுவதை மறுத்த அவர், விஜய் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்துவார் என்றும், மீண்டும் அவரே ஆட்சிக்கு வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அரசு அலுவலகங்களில் முன்பு நிலவியதாகக் கூறப்படும் ஊழல், லஞ்சம் தற்போது இல்லை என்றும் முதல்வர் விஜய்க்குப் பாராட்டுத் தெரிவித்தார். முதல்வர் விஜய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆட்சி நடத்துவதாக சீமான் கூறியுள்ளாரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இதுபற்றி நான் சிலருக்கு மட்டுமே பதில் சொல்வேன்” என வைகோ தெரிவித்தார்.