அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், ஆத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "2025 தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது தொடர்பாக கேள்வி கேட்கிறார்கள். அதிமுக, திமுகவை வீழ்த்த தயாராக இருக்கிறது. திமுகவை வீழ்த்துவதற்கு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். திமுக தான் எங்கள் எதிரி. திமுகவைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் எதிரி இல்லை. பாஜக குறித்த கேள்வியை ஆறு மாதங்களுக்கு பிறகு கேளுங்கள்." என்றார்.