தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற்கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2024-25-ஆம் ஆண்டு சட்டபேரவை புதிய அறிவிப்பில் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் இரண்டு தொழிற்பேட்டைகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் தற்போது முதலிபாளையம் தொழிற்பேட்டையில் அடிப்படை புனரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது மற்றும் ஈங்கூர் தொழிற்பேட்டையிலும் புனரமைப்புப்பணிகள் தொடங்கப்பட்டு 3 மாத காலத்தில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் குறு, சிறு மற்றும் பெரு தொழில் முனைவோரை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையில் வாடகை மற்றும் குத்தகை முறையில் காலிமனையாகவோ, மறுசீரமைக்கப்பட்ட தொழிற் கூடங்களாகவோ, ஒற்றைமாடி/ பலமாடி தொழிற்கூடங்களாகவோ அமைத்து அவர்களின் தேவைக்கேற்ப குறுகிய/நீண்டகால குத்தகை அல்லது வாடகை முறையில் வழங்க அரசு தற்போது முன் வந்துள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பத்துடன் விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்கள் தாங்கள் தொழில் செய்வதற்கு மேற்கண்ட ஏதேனும் முறையில் விண்ணப்பிக்கும் முன்பாக தள பார்வையிட விருப்பமுள்ளவர்கள் வருகின்ற ஏப்ரல் 04-2025 தொழிற்கூடங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 10 மணியளவில் ஈங்கூர் தொழிற் பேட்டையில் பார்வையிடலாம். மேலும், முதலிபாளையம் தொழிற்பேட்டைக்கு அழைத்து செல்ல துறையின் சார்பாக வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் தளத்தினை பார்வையிட்ட பிறகு அலுவலக தேவை படிவத்தின் மூலம் அவர்களின் விருப்பத்தை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கு பெற முனைவோர்கள் விருப்பமுள்ள https://forms.gle/fZPDgyWUToAAUobt7 தொழில் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு கைபேசி எண் 9150277723 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.