மயிலாடுதுறையில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய டாஸ்மாக் சூப்பர்வைசர் மீது மிளகாய் பொடி தூவி லேப்டாப் மற்றும் கைபையை அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் சூப்பர்வைசர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே, பஜனைமட தெருவில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு கடையில் விற்பனை முடிந்துவிட்டு அக்கடையின் சூப்பர்வைசர் ரமேஷ் குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சேந்தங்குடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

Mahavishnu: சர்ச்சை சொற்பொழிவு; அசோக் நகர், சைதாப்பேட்டை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதிரடி பணியிட மாற்றம்

வழிப்பறி

அப்போது அவர் சேந்தங்குடி ஆர்ச் அருகே சென்ற போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் குமார் மீது மிளகாய் பொடி தூவியுள்ளது. இதில் நிலை தடுமாறிய ரமேஷ் குமார் தனது இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவர் கையில் இருந்த லேப்டாப் மற்றும் கைபையை அந்த கும்பல் பறித்துக் கொண்டு சென்றுள்ளது.

தொழில் தொடங்குவதற்கு தமிழ்நாட்டுக்கு இடமில்லை; முதலீடு குவிவதாக கூறுவதெல்லாம் வெறும் மாயை தானா? - அன்புமணி கேள்வி

தப்பிய பணம்

லேப்டாப் மற்றும் அதிலிருந்து ஆவணங்கள் பறிக்கப்பட்ட நிலையில், விற்பனை பணத்தை கடையில் லாக்கரில் வைத்து பூட்டியதால், பணம் கொள்ளை போகமால் தப்பியுள்ளது. இந்நிலையில் இது குறித்து ரமேஷ் குமார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TNSTC Ticket Booking: புது உச்சம்! ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் புக்கிங்! தமிழக அரசு போக்குவரத்து கழகம் படைத்த வரலாறு

காவல்துறையினர் விசாரணை

இந்த கொள்ளை கும்பல் பல நாள் நோட்டமிட்டு டாஸ்மாக் கடையில் நடைபெற்ற விற்பனை பணத்தை எடுத்துச்செல்லும் ரமேஷ் குமார் செல்லும் வழியில் திட்டமிட்டு வழிபறியில் ஈடுபட்டுள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மயிலாடுதுறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் திருப்பதி விசாரணை மேற்கொண்டார். மிளகாய் பொடி தூவி டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நிகழ்வு மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Harshit Rana: மீண்டும் மீண்டுமா..ருதுராஜ் கெய்க்வாட்டை வம்புக்கு இழுத்த ஹர்சித் ராணா! கொந்தளித்த ரசிகர்கள்