மிளகாய் பொடி தூவி 10 கிலோ தங்கம் கொள்ளை: காரில் வந்த மர்ம கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

3 months ago 4
ARTICLE AD

திருச்சி அருகே மிளகாய் பொடியை தூவி ரூ.12 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்கத்தை நகை கடை மேலாளரிடம் இருந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் இயங்கி வரும் தனியார் ஜுவல்லரி மேலாளர் பிரதீப்கான் என்பவர் திண்டுக்கலில் ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் காரில் மூன்று பேருடன் நேற்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த சிறுகனூர் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை கீழவங்காரம் பிரிவு சாலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது காரில் இருந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு இறங்கியுள்ளனர். இந்நிலையில் பிரதீப்கான் காரை பின்தொடர்ந்து வேகமாக மற்றொரு கார் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்த காரில் இருந்து வேகமாக இறங்கி வந்த 4 பேர் இறங்கி பிரதீப்கான் உட்பட 4 பேர் மீதும் மிளகாய் பொடியை தூவியுள்ளனர். இதில் கண் எரிச்சல் ஏற்பட்டு 4 பேரும் அலறியுள்ளனர். இதற்கிடையில் அந்த மர்மநபர்கள் பிரதீப் கான் வந்த கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த 2 பேக்குகளில் 10 கிலோவிற்க்கும் மேல் இருந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு காரில் தப்பி சென்று விட்டனர்.

பின்னர் மிளகாய் பொடி தாக்குதலில் நிலைகுலைந்து தடுமாறிய பிரதீப்கான் உள்ளிட்ட மூன்று பேரும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீண்டனர். பின்ர் சமயபுரம் போலீசில் இதுகுறித்து பிரதீப் கான் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கல்லில் இருந்து பிரதீப் கான் வந்த காரை பின் தொடர்ந்து வந்து இந்த கொள்ளை சம்பவத்தை மர்மநபர்கள் செய்துள்ளனர் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தனியார் ஜுவல்லரி மேலாளர் உள்ளிட்ட மூன்று பேரிடமும் போலீசார் தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமயபுரம் போலீசார் அந்த பகுதியில் சிசிடிவி உள்ளதா? என்பது குறித்தும் சமயபுரம் சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை வைத்து  கொள்ளையர்களை தேடி வருகின்றனர். திருச்சி மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் உத்தரவின்படி நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.12 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article