மின் கம்பியில் தொங்கிய மனித கரு.. பார்த்து ஷாக்கான பயணிகள்.. ரயில் நிலையம் அருகே பரபர

7 months ago 9
ARTICLE AD

மின் கம்பியில் மனித கரு தொங்குவதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்றின் அருகே உள்ள மின் கம்பியில் மனித கருவை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மின் கம்பியில் தொங்கிய சிசுவின் சடலம்:

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் சஹ்ஜன்வா ரயில் நிலையம் இரண்டாவது பிளாட்பாரம் பின்பக்கம் கேசவ்பூர் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகே 20 அடி உயரத்தில் இருந்த மின் கம்பத்தில் மனித கரு தொங்கியுள்ளது.

மின் கம்பியில் மனித கரு சிக்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியான ரயில் பயணிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், மின் கம்பத்தில் தொங்கிய மனித கருவை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, உடற்கூராய்வுக்காக மனித கரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரி பரபரப்பு தகவல்:

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அருகிலுள்ள வீடுகளுக்கு வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகிறோம். அருகிலுள்ள ரயில்வே பக்க கட்டிடத்திலிருந்து கரு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. ஆனால், விசாரணைகள் தொடர்கின்றன" என்றார்.

மனிதாபிமானமே இல்லாமல் சிசுவின் சடலத்தை அங்கு கொண்டு போய் போட்டது யார் என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இறந்த சிசுவின் சடலத்தை அங்கு போய் போட்டார்களா இல்லை, பெண் வயிற்றில் இருந்து சிசு உயிரோடு எடுக்கப்பட்டதா என்பது குறித்து தெரிய வில்லை.

உ.பி.யில் தொடரும் மர்மம்:

உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினம் தினம் நடக்கும் இம்மாதிரியான குற்றச் செயல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நின்றபாடில்லை.

சமீபத்தில், தனியார் பள்ளி மேலாளரே, 8 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த சிறுவன் தப்பித்துவிட்டார். அதற்கு முன்பு ஒரு சிறுவன் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த சிறுவனை கொலை செய்தது பள்ளி உரிமையாளர் என்பது பின்னர் தெரிய வந்தது.

Read Entire Article