மிக குறைந்த உடல் எடையுடன் பிறந்த குழந்தை; தீவிர சிகிச்சை அளித்து மீட்ட தஞ்சை டைனி ஹார்ட்ஸ்

8 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: ஐவிஎப் முறையில் கருத்தரித்து 26 வாரங்களிலேயே மிகவும் குறைவான உடல் எடையுடன் பிறந்த குழந்தையை தஞ்சை டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து நலம் பெற செய்துள்ளனர். தற்போது 5 மாதம் ஆகும் நிலையில் குழந்தை சீரான வளர்ச்சியுடன் உள்ளது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகரில் இயங்கி வருகிறது டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பல்வேறு உடல் நல சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. முக்கியமாக 3000 குழந்தைகளுக்கு பல்வேறு இதய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்து அக்குழந்தைகள் நலமுடன் நடமாட செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டையை சேர்ந்த 35 வயது ஐவிஎப் முறையில் கருத்தரித்த இளம்பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக 26 வாரங்களில் மிகவும் குறைவான 650 கிராம் உடல் எடையுடன் பிறந்த குழந்தையுடன் சேர்க்கப்பட்டார். 40 வாரங்கள் குழந்தை பிறப்பு காலத்தில் 26வது வாரத்தில் பனிக்குடம் உடைந்ததால் குழந்தை பாதிப்புடன் பிறந்தது. மிகவும் குறைவான எடையின் காரணமாக குழந்தைக்கு மூளை பிரச்சினை, செரிமான கோளாறு மற்றும் பால் எடுத்துக் கொள்ளும் தன்மை போன்று பல்வேறு சிக்கல்கள் இருந்தது. இதனால் குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது.

இதையடுத்து குழந்தையை டைனி ஹார்ட்ஸ் மருத்துவக்குழுவினர் 85 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்து மீட்டுள்ளனர். தற்போது குழந்தைக்கு 5 மாதங்கள் ஆகும் நிலையில் சீரான வளர்ச்சியுடன் நலமுடன் உள்ளார். இதுபோன்ற சிகிச்சைகள் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே கிடைக்கும். தற்போது தஞ்சாவூரில் டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனையில் சென்னையில் அளிக்கப்படும் சிகிச்சை போன்ற குறைந்த கட்டணத்தில் இந்த குழந்தைக்கு சிசிக்சை அளித்து நலமுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மணிராம் கிருஷ்ணா கூறுகையில், மிகவும் இக்கட்டான நிலையில் குழந்தை இருந்தது. மிகவும் குறைவான உடல் எடையுடன் பிறந்த அக்குழந்தையை நலமாக்க தீவிர கண்காணிப்பும், சிகிச்சையும் மேற்கொண்டோம். இதுபோன்று பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். சராசரியாக இரண்டரை கிலோ வரை குழந்தைகள் இருக்க வேண்டும். குழந்தை பிறக்கும் காலத்திற்கு முன்கூட்டியே பிறந்ததால் மூச்சுவிட இயலாத நிலை இருந்தது குழந்தைக்கு. இதனால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தீவிர உயர்தர சிகிச்சை அளித்து மீட்டுள்ளோம். தற்போது குழந்தை இயல்பான உடல் எடையான 2 கிலோ வரை நலமுடன் உள்ளது என்றார்.

துணை இயக்குனர் டாக்டர் உஷா மணிராம் கிருஷ்ணா கூறுகையில், இதுபோன்று பிறக்கும் குழந்தைகளை நிச்சயம் காப்பாற்றி விட முடியும் என்று டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனை நிரூபித்துள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு விதமான இதய பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டு நலம் பெற்று உள்ளனர். இந்த குழந்தையை நலமுடன் மீட்க பெற்றோரும் சிறந்த வகையில் ஒத்துழைப்பு அளித்தனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் குழந்தை பிறந்து இதுபோன்ற பிரச்னை என்றால் அந்த தாய் படும் பாடு எப்படி என்று அனைவரும் அறிவர். அந்த குழந்தையின் பிரச்னைகளை தீர்த்து நலமுடன் மீட்டுள்ளோம். 85 நாட்கள் கடும் போராட்டத்தின் மத்தியில் குழந்தையை நலம் பெற செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்றார்.

தொடர்ந்து தன்னையும், தன் குழந்தையையும் நலமுடன் மீட்ட டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பட்டுக்கோட்டையை சேர்ந்த அந்த இளம் பெண் நன்றிகள் தெரிவித்தார்.

Read Entire Article