மார்ச் 2 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு: புதுச்சேரி & காரைக்காலில் 7,800 மாணவர்கள் களம்!

3 months ago 12
ARTICLE AD

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2026-ஆம் ஆண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், அரசு பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் வரும் மார்ச் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.,

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் வரும் 02.03.2026 முதல் 26.03.2026 வரை தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட தேர்வு கால அட்டவணைப்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படுகிறது.

இதற்காக புதுச்சேரி பகுதியில் 20 மேல்நிலைத் தேர்வு மையங்களும் காரைக்கால் பகுதியில் 5 மேல்நிலைத் தேர்வு மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையங்களுக்கான மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள், நிலையான படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இத்துறை மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு புதுச்சேரி பகுதியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வினை 84 தனியார் பள்ளியைச் சேர்ந்த 6979 பள்ளி மாணவர்களும் 173 தனித் தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர். காரைக்கால் பகுதியில் இரண்டாம் ஆண்டு தேர்வினை 16 தனியார் பள்ளியைச் சேர்ந்த 606 பள்ளி மாணவர்களும் 112 தனித் தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர்.

தேர்வு நடைபெறும் நாட்களில் மந்தணக் கட்டுகளை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் என புதுச்சேரி பகுதியில் 06 வழித்தடங்களும் காரைக்கால் பகுதியில் 02 வழித்தடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் தேர்வின் போது தடையின்றி மின்சார சேவை ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் எவரும் அலைபேசி (Mobile Phone) மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது. எனவே "பொது தேர்வெழுதும் பள்ளித் தேர்வர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் எவரும் தேர்வு மையத்திற்கு அலைபேசி மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்து வருதல் கூடாது.

அதனை மீறி அலைபேசிகள் அல்லது ஏதேனும் பிற தொலை தொடர்பு சாதனங்களையோ எடுத்து வந்து விட்டு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரையோ அல்லது தேர்வறைக் கண்காணிப்பாளர்களையோ பாதுகாப்பாக பராமரித்து திருப்பியளிக்குமாறு கோருதல் கூடாது".

தேர்வுக்கூட அனுமதி சீட்டு (Hall Ticket) இல்லாத மாணவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தனித்தேர்வர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து தனியார் கணிணி மையம் (Private Browsing Centre) மூலம் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு அறையில் மற்றும் தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் புரியும் குற்றத்திற்கு ஏற்ப தண்டனைகள் அளிக்கப்படும். எனவே தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருத்தல் வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article