மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!

4 months ago 8
ARTICLE AD

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜூலை மாதத்தில் மாருதி சுஸுகி, எம்ஜி மோட்டார் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளன. இந்த நிறுவனங்களின் புதிய மாடல்களின் வடிவமைப்பு, இன்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி ப்ரீஸா ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki Brezza Facelift):

மாருதியின் சுஸுகியின் ப்ரீஸா ஃபேஸ்லிஃப்ட் கார் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பைப் பெற்றுள்ளது. காம்பாக்ட் எஸ்யுவியான இது ஜூலை 23ஆம் தேதி அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்புறத்தில் புதிய பெரிய கிரில், ஸ்லீக்கான எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் மாற்றிமைக்கப்பட்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளன. இதில் புதிய 1.2-லிட்டர் Z-சீரிஸ், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகள் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்டிற்கான தரைக்குக் கீழுள்ள சிலிண்டர் ஆகியவையும் இடம்பெறலாம்.

எம்ஜி பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி

எம்ஜி மோட்டார் நிறுவனமும் தனது புதிய 7-சீட்டர் எஸ்யூவியை ஜூலை மாதம் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இது நிறுவனத்தின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனம் (PHEV) என்று நம்பப்படுகிறது. இந்த வகை கார், பெட்ரோல் இன்ஜினுடன் எலக்ட்ரிக் மோட்டாரையும் இணைக்கிறது.

இது குறுகிய தூரப் பயணங்களுக்கு முழுவதுமாக மின்சாரத்தில் இயங்க அனுமதிக்கிறது, அதே நேரத்தில் நீண்ட பயணங்களுக்கு பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. எலக்ட்ரிக் காரின் குறைந்த இயக்கச் செலவுகளை விரும்பும், ஆனால் சார்ஜிங் உள்கட்டமைப்பு பற்றி கவலைப்பட விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.

நிசான் டெக்டன் (Nissan Tekton)

நிசான் நிறுவனமும் தனது புதிய நடுத்தர அளவிலான எஸ்யூவியான டெக்டனை ஜூலை மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் இந்த எஸ்யூவியை ஜூலை 9 அன்று அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற இந்திய சந்தையில் உள்ள பிரபலமான வாகனங்களுடன் போட்டியிடும் வகையில் நிசான் டெக்டன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது கவர்ச்சிகரமான வடிவமைப்பு, நவீன கேபின், பல மேம்பட்ட அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் தேர்வுகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு மீண்டும் திரும்புவதற்கான நிசானின் உத்தியின் ஒரு முக்கிய பகுதியாக இந்த மாடல் கருதப்படுகிறது.

இந்த புதிய கார்களின் வருகை, இந்திய வாகன சந்தையில் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில், வாகன உற்பத்தியாளர்கள் மேம்பட்ட வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், மற்றும் ஹைப்ரிட் மற்றும் எலக்ட்ரிக் பவர் டிரெய்ன் தேர்வுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

Read Entire Article