மாணவர்களே மிஸ் செய்யாதீங்க! சென்னை ஐஐடியில் புது Course.. வீட்டில் இருந்தே படிக்கலாம்!

1 year ago 7
ARTICLE AD

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி மெட்ராஸ்) இரண்டு புது படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்நெறி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘ஐஐடிஎம் பள்ளி இணைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் ‘தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு’, ‘எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்’ ஆகிய இரு சான்றிதழ் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கங்களுடன், ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களைக் கொண்டு இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கிடைத்த முத்தான வாய்ப்பு:

ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும் இப்படிப்புகளின் மூலம் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இந்தத் துறைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் வகையில் மாணவர்களுக்கான அறிமுகப் படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் உயர்கல்வி, தொழில்நெறி ஆகியவை குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து முடிவெடுக்கவும் உதவிகரமாக இருக்கும்.

அடுத்த தொகுதி 21 அக்டோபர் 2024 அன்று தொடங்குவதையொட்டி, அதற்கான விண்ணப்பப் பதிவுகள் செப்டம்பர் 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து செயல்பட விரும்பும் பள்ளிகள் பின்வரும் இணைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்… https://school-connect.study.iitm.ac.in/

ஐஐடி மெட்ராஸில் பள்ளி மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட படிப்புகள்:

Data Science and AI:

பதினொன்றாம் வகுப்பில் அனைத்து பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் தகுதியுடையவர்கள்.

Electronic Systems:

பதினொன்றாம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் படிக்கும் மாணவர்கள் தகுதியானவர்கள்.

Schedule:

படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் எப்போதிலிருந்து விண்ணப்பிக்கலாம்: செப்டம்பர் 16, 2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்டோபர் 4, 2024

பள்ளிகள் பதிவு செய்து கொள்வதற்கான காலக்கெடு: செப்டம்பர் 30, 2024, (பேட்ச்சில் மாணவர்கள் சேர்வதற்கான கடைசி தேதி)

Course தொடங்கும் தேதி: அக்டோபர் 21, 2024

பாடப்பிரிவின் கீழ் விரிவுரை வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொன்றும் 30 நிமிட கால அளவு கொண்ட வீடியோக்கள் ஆகும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் பதிவேற்றப்படும்.

பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களை வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் பார்க்கலாம்.

மாதத்திற்கு ஒருமுறை நேரலை ஊடாடும் அமர்வுகள் நடத்தப்படும். வார இறுதிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில், வீட்டுப்பாடங்கள் தரப்படும்.

Read Entire Article