மாணவர்களுக்கு வாழ்வியல் நெறி: சங்க இலக்கியம் போதிக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்!

3 months ago 3
ARTICLE AD

'சங்க இலக்கியக் காட்சிகளும் அதன் பயன்பாடுகளும்' என்ற தலைப்பில் சங்கத்தமிழ்க்கூடலின் முதல் நிகழ்ச்சி நடத்தப்பெற்றது.

சங்க இலக்கியக் காட்சிகளும் அதன் பயன்பாடுகளும்

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் கீழ் செயல்படும் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடத்தில் 'சங்க இலக்கியக் காட்சிகளும் அதன் பயன்பாடுகளும்' என்ற தலைப்பில் சங்கத்தமிழ்க்கூடலின் முதல் நிகழ்ச்சி நடத்தப்பெற்றது. அவர் தம் உரையில், "சங்க காலத்தில் புலவர்கள் மன்னர்களை நல்வழிப்படுத்தினர். அதற்குச் சான்றாக, புறநானூற்றின் ஐந்தாவது பாடல் அமைகின்றது. இதைப் பாடியவர் நரிவெரூஉத்தலையார். சேரமான் கோப்பெருஞ்சேரலைப் பாடியது. எருமை போன்ற கரிய பாறைகள் பொருந்திய இடையிடையே பசுக்கூட்டம் போன்ற யானைகள் விளங்கும் காட்டிற்குரிய சேரமன்னனே! ஒன்று சொல்கிறேன் கேட்பாயாக. தன்னுடைய வாழ்விலிருந்து அருளையும் அன்பையும் நீக்கிவிட்டவர், துன்பத்திலே கிடந்து உழல்வர். அப்படிப்பட்டவர்களோடு சேராதே. பெற்ற தாய் தன் குழந்தையைப் பேணுவதுபோல் உன் நாட்டைப் பேணிக் காத்து வருவாயாக! அரசனாவது எளிதில் வாய்ப்பது கிடையாது. அருளோடு காவல் செய்க! என்று மன்னனுக்கு அறிவுரை நல்குகின்றார்.

அழகிய ஓவியங்களை இந்தச் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம்

சங்க இலக்கியங்கள் பொதுவாகச் சங்க கால மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, காதல், வீரம், அறம், விருந்தோம்பல், நட்பு, தன்மானம், ஈகை உள்ளிட்ட நற்பண்புகளை நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றன. இப்பண்புகளை வெளிக்கொணரும் அழகிய ஓவியங்களை இந்தச் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் நமக்கு விளக்குகின்றது. மாணவர்கள் இவற்றை உற்றுநோக்கினால் சங்க கால மக்களின் செம்மாந்த வாழ்வியல் நெறிகளை உணர்ந்து கொள்ளலாம். பள்ளிப் பருவத்தில் உள்ள நீங்கள் ஒளவையின் ஆத்திசூடிப் பாடல்களில் 'அறம் செய விரும்பு' என்று அறம் செய்ய வலியுறுத்துவதைப் படித்திருப்பீர்கள். அதைப் பின்பற்றுங்கள்" என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியைச் சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநர் ரெ.புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார். இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் செல்வம் ராமசாமி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகளும் ஆசிரியர்களும் தமிழறிஞர் பெருமக்களும் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Read Entire Article