மழைக்காலத்தில் உடல் நலத்தை காப்பது எவ்வாறு ? உணவையே மருந்தாக்குவது எப்படி?

6 days ago 3
ARTICLE AD

பருவக்காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலநிலையும் மாறும் போது அதற்கேற்றாற்போல் உடல் வெப்பநிலை, உணவுகள், உடைகளை நாம் தகவமைத்துக்கொள்வது அவசியமாகிறது. திடீரென மாறும் காலநிலையை உடல் ஏற்றுக்கொள்ள சிறுது காலம் தேவைப்படும் எனவே அதுவரை வெப்ப மற்றும் குளுமை மாறுபாடுகளை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இதன் சமநிலை தவறும் போது உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டு நாம் மருந்துகளை தேடிச்செல்லும் சூழல் உருவாக்கூடும்.

வந்தாச்சு மழைக்காலம்! உடல்நலத்தை பேணுவது அவசியம்

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதன் அடிப்படையில் இயற்கையோடு இணைந்து வாழ்வை மேற்கொள்வது தமிழர்களின் வழக்கமாக உள்ளது. இதன்படி உடல்நலக் கோளாறுகளுக்கு நமது அன்றாட உணவையே மருந்துகளாக்கிய பெருமை தமிழர்களுக்கு உண்டு. மழைக்காலம் என்றாலே ஜில் என்ற காலநிலை, குறைந்த வெப்பம் நிலவும் நிலையில் சிலருக்கு மழையில் நனைவது, ஐஸ்கிரீம் சாப்பிடுவது உள்ளிட்ட பழக்கங்கள் பிடித்தமானவை. அதீத குளுமை மற்றும் உடல் வெப்பச்சமநிலை இன்மை காரணமாக பொதுவாக சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகள் ஏற்படும்.

உணவையே மருந்தாக்குவது எப்படி?

சளி, இருமல் வந்து வந்தபிறகு மட்டுமின்றி மழைக்காலத்தில் பொதுவாகவே வெந்நீர் அருந்துவது நன்மை பயக்கும். குடிநீரில் உள்ள கிருமிகளை அழிக்கும் வெந்நீருக்கு தொண்டை வீக்கத்தை சீர்செய்யும் தன்மையும் உண்டு. மேலும், தினந்தோறும் உணவில் மிளகு சேர்த்துக்கொள்வது மற்றும் சிறிதளவு தேனை வெதுவெதுப்பான நீர் அல்லது இஞ்சி கலந்த மூலிகைத் தேநீரில் கலந்து குடிப்பது சளித்தொல்லையிலிருந்து விடுபட பேருதவியாக இருக்கும். மேலும் தூதுவளையை துவையல் அல்லது ரசம் வைத்து உண்பது, நாளுக்கு ஒருமுறையாவது வெற்றிலை எடுத்துக்கொள்வதும் ஆகியவையும் உடலுக்கு நன்மை பயக்கும்.

தொற்றுகளில் இருந்து தற்காப்பு அவசியம்

குளுமையால் ஏற்படும் உடல்நலக்கோளாறுகளை கடந்து கொசுக்கள் மூலமாகவும், நீர்த்தொற்றுக்கள் மூலமாகவும் பரவும் நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இன்றியமையாதது.பொதுவாக மழைநேரங்களில் நீர்த்தேங்குவதன் மூலமாக உருவாகும் கொசுக்களால் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்களும், அசுத்தமான நீரின் மூலம் காலரா, டைபாய்டு உள்ளிட்டவையும் பரவக்கூடும். தூய்மையான நீரை பயன்படுத்துவது வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்முன் கை, கால்களை சுத்தப்படுத்துவது உள்ளிட்டவை முதன்மையான தற்காப்பு நடவடிக்கைகள் ஆகும்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை போல 80 சதவீத உடல்நலக்கோளாறுகளை நாம் விழிப்புடன் இருந்தால் தடுக்க முடியும் என்பது நிதர்சனம்.

Read Entire Article