<p>பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரினியின் மகனான சாய் அப்யங்கர் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். 'கட்சி சேர' ' ஆச கூட' ஆகிய இரு ஆல்பம் பாடல்களைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் மலையாளத்தில் உருவாகியுள்ள பல்டி படத்தின் மூலம் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க சாய் அப்யங்கர் அவர் வாங்கிய சம்பளம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது</p>
<h2>பல்டி படத்திற்கு 2 கோடி வாங்கிய சாய் அப்யங்கர்</h2>
<p>உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் ஷாந்தனு நடித்துள்ள ஸ்போர்ட்ஸ் டிராமா படம் பல்டி. ப்ரித்தி அஸ்ரானி , செல்வராகவன் , அல்ஃபோன்ஸ் புத்திரன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் டி குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். இன்று செப்டம்பர் 26 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் பல்டி படத்திற்கு இசையமைக்க சாய் அப்யங்கருக்கு 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் மற்ற இசையமைப்பாளர்களைக் காட்டிலும் அதிக சம்பளம் சாய் அப்யங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. " பல்டி படத்திற்கு ஒரு இளம் இசையமைப்பாளரை அறிமுக படுத்த நினைத்தோம். சாய் அப்யங்கர் பொறுத்தமானவராக தெரிந்தார். அவரது பாடல்கள் இணையத்தில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. அவருக்கு இயல்பாகவே அந்த திறமை இருக்கிறது" என அவர் கூறினார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/gk/how-fast-a-cobra-snake-can-run-234968" width="631" height="381" scrolling="no"></iframe> </p>