மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான நந்தி பகவான்...சிலிர்க்க வைக்கும் வரலாறு...

3 weeks ago 4
ARTICLE AD

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த உலகப் புகழ்பெற்ற திருவெண்காடு புதன் ஸ்தலத்தில், சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப் பெருக்கோடு சாமி தரிசனம் செய்தனர்.

காசிக்கு இணையான ஆதி சிதம்பரம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இது வெறும் கோயில் மட்டுமல்ல, ஆன்மீக வரலாற்றில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 11-வது சிவத்தலமாகும் இது. காசிக்கு இணையான ஆறு சிவத்தலங்களில் முதன்மையானதாகப் போற்றப்படும் இத்தலம், 'ஆதி சிதம்பரம்' என்று அழைக்கப்படுகிறது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இத்தலத்தில்தான் என்பது இதன் வரலாற்றுச் சிறப்பு.

மும்மூர்த்திகள் மற்றும் முத்தீர்த்தங்களின் மகிமை

சுவேதாரண்யேசுவரர் திருக்கோயிலில் தீர்த்தம், தலம், மரம் (விருட்சம்) என அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு. சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனித நீராடி சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டால் ஞானம் பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

மேலும், இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அகோரமூர்த்தி மற்றும் ஆதி நடராஜர் ஆகியோருக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன. நவகிரகங்களில் கல்வி மற்றும் ஞானத்திற்கு அதிபதியான புதன் பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குவதால், வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

அசுரனை எதிர்த்த நந்தி: புராண வரலாறு

இக்கோயிலில் உள்ள நந்தி பகவான் சிலையின் மீது காணப்படும் காயங்கள் ஒரு புராண வரலாற்றைக் கூறுகின்றன. முற்காலத்தில் மருத்துவா சூரன் என்ற அசுரன் கடுந்தவம் புரிந்து சிவபெருமானிடமிருந்து வலிமைமிக்க சூலாயுதத்தைப் பெற்றான். அந்த ஆயுதத்தைக் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும் அவன் துன்புறுத்தத் தொடங்கினான்.

சிவபெருமானின் ஆணைப்படி நந்தி பகவான் அசுரனிடம் சென்று தர்மத்தை எடுத்துக்கூறினார். ஆனால், ஆங்காரத்தில் இருந்த மருத்துவா சூரன், தான் பெற்ற சூலாயுதத்தால் நந்தி பகவானைத் தாக்கினான். அந்தத் தாக்குதலின் வடுக்கள் இன்றும் நந்தி சிலையின் மீது தத்ரூபமாகக் காணப்படுகின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

சித்திரை பிரதோஷ சிறப்பு அபிஷேகம்

சித்திரை மாதப் பிரதோஷமான நேற்று, அந்தத் தியாகம் புரிந்த நந்தி பகவானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. மாலை பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்கு மாப்பொடி, மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளைக் கொண்டு நறுமண வாசனை திரவியங்களுடன் மகா அபிஷேகம் நடைபெற்றது.

அபிஷேகத்திற்குப் பிறகு நந்தி பகவான் மலர்களாலும், பட்டு வஸ்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. "நமசிவாய" எனும் கோஷம் விண்ணதிர பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வழிப்பட்டனர்.

வீதி உலா மற்றும் பக்தர்களின் வரவேற்பு

பூஜையின் ஒரு பகுதியாக சுவாமி மற்றும் அம்பாள் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி, கோயில் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர். இதில் திருவெண்காடு மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களான நாங்கூர், தருமகுளம், பெருந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர். சிவாச்சாரியார் கீர்த்திவாசன் தலைமையில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகளைச் சிறப்பாகச் செய்து வைத்தனர்.

Read Entire Article