மருத்துவக் காப்பீடு 'வடிவேலு காமெடி': ரூ.150 கோடி கஜானாவுக்கு கேட்கும் அரசு ஊழியர்கள்!

3 months ago 10
ARTICLE AD

எங்களுக்கு கொடுத்த இன்சூரன்ஸ் வடிவேல் தேங்காய் காமெடி போல உள்ளது. ப்ரோ ஆண்டுக்கு 150 கோடி தனியாருக்கு போகுது அதனை அரசு கஜானாவில்  சேர்க்க நடவடிக்கை எடுங்க ப்ரோ கோரிக்கையை கேளுங்க ப்ரோ - அரசு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டத்தில் நூதனமாக அரசுக்கு கோரிக்கை வைத்த அரசு ஊழியர்கள்.

தவெக ஆட்சி தொடங்கி முதல் போராட்டத்தை முன்னெடுத்த அரசு ஊழியர் சங்கத்தினர்

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து திருத்திய அரசாணை வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட வேண்டும், அரசு ஊழியர்களின் பெற்றோர்களையும், பிள்ளைகளையும் இத்திட்டத்தில் சேர்த்திட வேண்டும், அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை முறையினை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், உயர் சிகிச்சைக்கான தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். அதிகபட்ச உச்சவரம்பு இருக்க கூடாது, பயனாளிகளிடம் சிகிச்சையின்போது கூடுதல் தொகையினை வசூலிக்கும் மருத்துவமனை மற்றும் காப்பீட்டு நிறுவனம் மீது சட்டப்படியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும், நீண்டகால நோய்களுக்கான தேவையான மருந்துகள் முழுவதும் இலவசமாக வழங்கப்பட வேண்டும், முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட 18-அம்ச கோரிக்கைகளையும் சேர்த்து திருத்திய அரசாணையாக வெளியிட வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அரசு ஊழியர் சங்க நிர்வாகி நீதிராஜன்

எங்களுக்கு கொடுத்த இன்சூரன்ஸ் வடிவேல் தேங்காய் காமெடி போல உள்ளது. ப்ரோ ஆண்டுக்கு 150 கோடி தனியாருக்கு போகுது அதனை அரசு கஜானாவில் சேர்க்க நடவடிக்கை எடுங்க ப்ரோ கோரிக்கையை கேளுங்க ப்ரோ இதுபோன்ற நிர்வாகத்தை அரசை நாங்கள் எதிர்பார்க்கவில்லை,  கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைப்பெறும் என ஆர்ப்பாட்டத்தில் நூதனமான முறையில் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

Read Entire Article